Advertisment

இப்படிப்பட்டவங்ககூட போய் இருக்கனுமா? பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல யோசிக்கும் பிரபலம்...

இந்த வருடத்திற்காக தொடங்கப்பட்ட பிக்பாஸ் 3 நிகழ்ச்சி 75 நாட்களை தாண்டிவிட்டது. பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்‌ஷி, மதுமிதா, அபிராமி, வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக உள்ளே வந்த கஸ்தூரியும் இதுவரை வெளியேறியுள்ளனர். கடந்த வாரம் சேரன் வெளியேற்றப்பட்டு சீக்ரெட் ரூமில் தங்க வைக்கப்பட்டுள்ளார். தற்போது இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது.

Advertisment

kaml

16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 7 போட்டியாளர்கள் உள்ளனர். ஏற்கனவே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சாக்‌ஷி, அபிராமி, மோகன் வைத்யா ஆகியோர் கடந்த வாரம் விருந்தினர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர். இவர்கள் வீட்டுக்குள் சென்று போட்டியாளர்களிடையே பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தினார்கள்.

Advertisment

இந்நிலையில், பிக்பாஸ் முதலாம் சீசனில் 2-வது இடத்தை பிடித்த சினேகன் விருந்தினராக செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சினேகன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “பிக்பாஸ் வீட்டுக்குள் விருந்தினராக செல்ல அழைப்பு வந்துள்ளது. இப்படிப்பட்டவர்களுடன் உள்ளே சென்று இருக்க வேண்டுமா என்று யோசித்துக் கொண்டு இருக்கின்றேன். கருத்துக்கள் வரவேற்கத்தக்கது” என்று பதிவிட்டுள்ளார்.

bigg boss 3 Kamalhasaan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe