Skip to main content

இப்படிப்பட்டவங்ககூட போய் இருக்கனுமா? பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல யோசிக்கும் பிரபலம்...

Published on 10/09/2019 | Edited on 10/09/2019

இந்த வருடத்திற்காக தொடங்கப்பட்ட பிக்பாஸ் 3 நிகழ்ச்சி 75 நாட்களை தாண்டிவிட்டது.  பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்‌ஷி, மதுமிதா, அபிராமி, வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக உள்ளே வந்த கஸ்தூரியும் இதுவரை வெளியேறியுள்ளனர். கடந்த வாரம் சேரன் வெளியேற்றப்பட்டு சீக்ரெட் ரூமில் தங்க வைக்கப்பட்டுள்ளார். தற்போது இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது.
 

kaml

 

 

16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 7 போட்டியாளர்கள் உள்ளனர். ஏற்கனவே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சாக்‌ஷி, அபிராமி, மோகன் வைத்யா ஆகியோர் கடந்த வாரம் விருந்தினர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர். இவர்கள் வீட்டுக்குள் சென்று போட்டியாளர்களிடையே பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தினார்கள்.

இந்நிலையில், பிக்பாஸ் முதலாம் சீசனில் 2-வது இடத்தை பிடித்த சினேகன் விருந்தினராக செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சினேகன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,  “பிக்பாஸ் வீட்டுக்குள் விருந்தினராக செல்ல அழைப்பு வந்துள்ளது. இப்படிப்பட்டவர்களுடன் உள்ளே சென்று இருக்க வேண்டுமா என்று யோசித்துக் கொண்டு இருக்கின்றேன். கருத்துக்கள் வரவேற்கத்தக்கது” என்று பதிவிட்டுள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கொம்புல பூவைச் சுத்தி நெத்தியில் பொட்டு வச்சு’ - சென்னையில் ஜல்லிக்கட்டு; கமல் முயற்சி

Published on 06/01/2023 | Edited on 06/01/2023

 

 

 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். செப்டம்பர் 7 aaம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணம் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைக் கடந்து தற்போது உத்தரப்பிரதேசம் வந்தடைந்துள்ளது.

 

இந்திய ஒற்றுமைப் பயணத்திற்காக டெல்லியில் நடைபெற்ற பேரணியில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். இந்தப் பேரணியில் மக்கள் நீதி மய்யத்தின் கட்சித் தொண்டர்கள் சிலரும் கலந்து கொண்டனர். 

 

இந்திய ஒற்றுமைப் பயணம் முடிந்த பின் தமிழகம் திரும்பிய பின் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தனது கட்சியினருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் ஒற்றுமைப் பயணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு ஜனவரி 6 இல் விருந்து ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறியிருந்தார். இந்நிலையில், இன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் பின் கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

கட்சியினர் உடனான கூட்டம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “கட்சி நிர்வாகிகளிடம் பேசினோம். ஒரு குரல் கேட்டதும் அவர்கள் திரண்டு டெல்லிக்கு வந்தார்கள். பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொண்டார்கள். இது முதற்கட்ட நடவடிக்கை தான். பாரதத்தின் இழந்த மாண்புகளை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் உள்ளது. கட்சிக்கு அப்பாற்பட்ட யாத்திரை இது. அதையும் சொல்லிவிட்டு அடுத்தகட்ட ஏற்பாடுகளைச் சொன்னோம். என் மனதில் உள்ள திட்டங்களில் ஒன்று சென்னையில் ஜல்லிக்கட்டைக் கொண்டு வந்து நடத்த வேண்டும் என்பது. அதற்கான அனுமதிகளைப் பெறுவதற்காக முயன்று வருகிறோம். மற்றபடி கட்சி சம்பந்தமான விஷயங்களை விவாதித்தோம். 

 

சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும். ஜல்லிக்கட்டுக்காகப் போராட்டம் நடந்த இடத்திலேயே நடத்த முடியாது. அதில் சில சட்டச்சிக்கல்கள் உள்ளன. ஆனாலும் சென்னையில் நடத்த வேண்டும். நகரத்தில் உள்ளவர்களுக்கு அதன் அருமை தெரியவேண்டும் என்பது எங்கள் ஆசை.” எனக் கூறினார்.

 


 

Next Story

நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி

Published on 23/11/2022 | Edited on 23/11/2022

 

nn

 

நடிகர் கமல்ஹாசன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லேசான காய்ச்சல் காரணமாக நடிகர் கமல்ஹாசன் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.