snehan actress jayalakshmi issue Police registered a case against actress Jayalakshmi

பாடலாசிரியரும்மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகியுமான சினேகன்,தான் நடத்தி வருகிற ‘சினேகம்’ என்ற அறக்கட்டளையின் பெயரில் சமூக வலைதளத்தில் போலிக் கணக்குகள் தொடங்கி பணம் வசூலித்து வருவதாக நடிகையும்பாஜக பிரமுகருமான ஜெயலட்சுமியின்மீது சென்னை ஆணையர் அலுவலகத்தில்புகார் அளித்திருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த நடிகை ஜெயலட்சுமி, சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் புகார் அளித்திருந்தார்.

Advertisment

பின்பு இருவரையும் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர் .ஆனால், சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை ஜெயலட்சுமி மீண்டும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும் இது தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்திலும் நடிகை ஜெயலட்சுமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது அவதூறு பரப்பும் வகையில் பேசிய பாடலாசிரியர் சினேகன் மீது வழக்குப்பதிவு செய்ய எழும்பூர் மேஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார்.

Advertisment

இதனிடையே சினேகன், தான் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, நடிகையும் பாஜக பிரமுகருமான ஜெயலட்சுமி மீது வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் ஜெயலட்சுமி மீது சென்னை திருமங்கலம் போலீசார் சட்ட பிரிவு 420 மற்றும் 465 என 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.