/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/DZTMJpvU0AYHn1S.jpg)
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த சினேகன் தற்போது 'பனங்காட்டு நரி' என்ற படத்தில் நடிக்கிறார். இதில் சினேகன் ஜோடியாக ஓவியாவை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது. நடிகை ஓவியா தற்போது ராகவா லாரன்ஸ் ஜோடியாக 'காஞ்சனா3' படத்திலும், விமல் ஜோடியாக 'களவாணி 2' படத்திலும், அனிதா உதீப் இயக்கத்தில், சிம்பு இசையமைக்கும் '90எம்.எல்' என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சினேகன் படத்தில் நடிக்கும் பட்சத்தில் அதில் நாயகியாகவோ அல்லது முக்கிய கதாபாத்திரத்திலோ ஓவியா நடிப்பார் என்று கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளி வரும் என்று நம்பப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)