Shot Boot Three

Advertisment

தமிழில் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’, ‘நிபுணன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் வைத்யநாதன், தற்போது ‘ஷாட் பூட் 3’ என்ற படத்தை இயக்குகிறார். குழந்தைகளை மையமாக வைத்து உருவாகவுள்ள இப்படத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்கிறார். இப்படத்தில் நடிகர் யோகி பாபுவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யூனிவெர்ஸ் கிரியேஷன்ஸ் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் மூலம் பிரபல வீணை கலைஞரான ராஜேஷ் வைத்யா இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

இப்படத்தின் பணிகள் நேற்று (15.09.2021) சென்னையில் பூஜையுடன் தொடங்கிய நிலையில், இப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.