Advertisment

'பிக்பாஸ்' புகழ் கவிஞர் சினேகனுக்கு திருமணம்! நடிகையை மணக்கிறார்!

bfbfdsbfdshbds

தமிழ் சினிமாவில் 700க்கும் மேற்பட்ட படங்களில் பாடலாசிரியராக பணிபுரிந்துள்ளார் கவிஞர் சினேகன். பின்னர், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும்பிரபலமானார். இதையடுத்து படங்களிலும் நடித்துக்கொண்டே அரசியலிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் பாடலாசிரியர் சினேகனுக்கு வரும் ஜூலை 29-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இவர் டிவி நடிகை கன்னிகாவை திருமணம் செய்ய உள்ளார்.

Advertisment

nbcxbxnbx

'தேவராட்டம்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை கன்னிகா தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இது ஒரு காதல் திருமணமாகும். இருவரும் எட்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் உலகநாயகன் கமல்ஹாசன் தலைமையில் இவர்கள் திருமணம் நடைபெறவுள்ளது. ஜூலை 29-ந் தேதி காலை 10.45 மணியளவில் சென்னையில் உள்ள கிரீன் பார்க் ஓட்டலில் நடைபெறும் திருமணத்தில் இரு வீட்டாரின் குடும்பத்தினரும், மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளும்கலந்து கொள்கிறார்கள்.

Advertisment

snehan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe