Skip to main content

'பிக்பாஸ்' புகழ் கவிஞர் சினேகனுக்கு திருமணம்! நடிகையை மணக்கிறார்!

Published on 26/07/2021 | Edited on 26/07/2021
bfbfdsbfdshbds

 

தமிழ் சினிமாவில் 700க்கும் மேற்பட்ட படங்களில் பாடலாசிரியராக பணிபுரிந்துள்ளார் கவிஞர் சினேகன். பின்னர், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார். இதையடுத்து படங்களிலும் நடித்துக்கொண்டே அரசியலிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் பாடலாசிரியர் சினேகனுக்கு வரும் ஜூலை 29-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இவர் டிவி நடிகை கன்னிகாவை திருமணம் செய்ய உள்ளார். 

 

nbcxbxnbx

 

'தேவராட்டம்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை கன்னிகா தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இது ஒரு காதல் திருமணமாகும். இருவரும் எட்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் உலகநாயகன் கமல்ஹாசன் தலைமையில் இவர்கள் திருமணம் நடைபெறவுள்ளது. ஜூலை 29-ந் தேதி காலை 10.45 மணியளவில் சென்னையில் உள்ள கிரீன் பார்க் ஓட்டலில் நடைபெறும் திருமணத்தில் இரு வீட்டாரின் குடும்பத்தினரும், மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நடிகையும் பாஜக பிரமுகருமான ஜெயலட்சுமி கைது

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
actress and bjp member jayalakshmi arrest

பாடலாசிரியரும் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகியுமான சினேகன், தான் நடத்தி வருகிற ‘சினேகம்’ என்ற அறக்கட்டளையின் பெயரில் சமூக வலைத்தளத்தில் போலிக் கணக்குகள் தொடங்கி பணம் வசூலித்து வருவதாக நடிகையும் பாஜக பிரமுகருமான ஜெயலட்சுமியின் மீது சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதன் பிறகு அதே பெயரில் அறக்கட்டளை நடத்தி வரும் ஜெயலட்சுமி, பொதுவெளியில் தன் மீது அவதூறு பேசியுள்ளதாக சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். 

பின்பு இருவரையும் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். ஆனால், சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை ஜெயலட்சுமி மீண்டும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும் இது தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்திலும் ஜெயலட்சுமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அவதூறு பரப்பும் வகையில் பேசிய பாடலாசிரியர் சினேகன் மீது வழக்குப்பதிவு செய்ய எழும்பூர் மேஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். அதனடிப்படையில் திருமங்கலம் காவல்துறையினர் சினேகன் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சினேகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, திருமங்கலம் போலீஸார் சினேகன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டது. 

இதனிடையே சினேகன், தான் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, நடிகையும் பாஜக மாநில துணைத் தலைவியுமான ஜெயலட்சுமி மீது வழக்குப் பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் ஜெயலட்சுமி மீது சென்னை திருமங்கலம் போலீசார் சட்டப் பிரிவு 420 மற்றும் 465 என 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர். 

இந்த நிலையில், இன்று சென்னை திருமங்கலம் பகுதியில் உள்ள ஜெயலட்சுமி வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். 3 மணி நேரம் இந்த சோதனை நடைபெற்ற நிலையில், தற்போது ஜெயலட்சுமியை போலீஸார் கைது செய்துள்ளனர். 

Next Story

சினேகன் மீதான வழக்கு ரத்து

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
snehan jayalakshmi issue

பாடலாசிரியரும் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகியுமான சினேகன், தான் நடத்தி வருகிற ‘சினேகம்’ என்ற அறக்கட்டளையின் பெயரில் சமூக வலைத்தளத்தில் போலிக் கணக்குகள் தொடங்கி பணம் வசூலித்து வருவதாக நடிகையும் பாஜக பிரமுகருமான ஜெயலட்சுமியின் மீது சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதன் பிறகு அதே பெயரில் அறக்கட்டளை நடத்தி வரும் ஜெயலட்சுமி, பொதுவெளியில் தன் மீது அவதூறு பேசியுள்ளதாக சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். 

பின்பு இருவரையும் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். ஆனால், சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை ஜெயலட்சுமி மீண்டும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும் இது தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்திலும் ஜெயலட்சுமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அவதூறு பரப்பும் வகையில் பேசிய பாடலாசிரியர் சினேகன் மீது வழக்குப்பதிவு செய்ய எழும்பூர் மேஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். அதனடிப்படையில் திருமங்கலம் காவல்துறையினர் சினேகன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சினேகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவானது நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சினேகன் தரப்பு, ஜெயலட்சுமி மீது தான் கொடுத்த புகாருக்கு பதில் புகாராக, ஜெயலட்சுமி தன் மீது பொய் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சினேகன் மீது திருமங்கலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார்.