Advertisment

சல்மான் கானை கடித்த விஷ பாம்பு!

 snake bit Salman Khan

Advertisment

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான்கான் ஆண்டுதோறும் தனது பிறந்தநாள் மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை பன்வெல் பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டில் கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுகிறிஸ்துமஸ் மற்றும் பிறந்தநாளை கொண்டாட தனது குடும்பத்துடன் சல்மான் கான் பண்ணை வீட்டில் தங்கியிருந்த நிலையில் விஷ பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்நிலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சல்மான் கான் இது குறித்து கூறியுள்ளார். அதில்," கிறிஸ்துமஸ் தினத்தன்று (25.12.2021) குடும்பத்துடன் பண்ணை வீட்டில் தங்கி இருந்தேன். அப்போதுஅறைக்குள் அறைக்குள் விஷ பாம்பு ஒன்று புகுந்தது. அதை வெளியேற்றும்முயற்சியில் ஈடுபட்ட போதுவிஷ பாம்பு 3 முறை என் கையை கடித்தது. இதையடுத்து உடனடியாக மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டதால் குணமடைந்துநேற்று (26.12.2021) வீடு திரும்பினேன். அதன்பிறகும் அந்த இடத்தில்பாம்பு இருப்பதைகண்ட நாங்கள் பத்திரமாக காட்டுக்குள் கொண்டுபோய்விட்டுவிட்டோம்எனத் தெரிவித்துள்ளார்.

Salman Khan
இதையும் படியுங்கள்
Subscribe