தியேட்டரில் அழுத சிறுமி; ஆறுதல் படுத்திய சூரி

small girl crying after watching soori maaman movie

சூரி கதையின் நாயகனாக புதிதாக நடித்துள்ள ‘மாமன்’ படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் சூரி நடித்தது மட்டுமல்லாமல் கூடுதலாக கதையும் எழுதியுள்ளார். இப்படத்தை விலங்கு வெப் சீரிஸ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், இயக்கியிருக்க 'கருடன்' படத் தயாரிப்பாளர் லார்க் ஸ்டுடியோஸ் சார்பில் கே. குமார் தயாரித்துள்ளார். சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெட்சுமி நடித்திருக்க முக்கிய கதாபாத்திரங்களில் ராஜ்கிரண், சுவாசிகா, விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹேஷாம் அப்துல் வஹாப் என்பவர் இசையமைத்துள்ளார்.

மாமன் உறவை பற்றி பேசும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் திரையரங்கில் படம் பார்த்த ஒரு சிறுமி அவரது மாமவை நினைத்து அழுதுள்ளார். இதனை அருகில் இருந்த சூரிக்கு தெரிந்த ஒரு நபர் கவனிக்க, உடனே சூரிக்கு வீடியோ கால் போட்டு அந்த சிறுமியிடம் பேச வைத்துள்ளார். சூரி அந்த சிறுமியை ஆறுதல் படுத்தியுள்ளார். இந்த சம்பவத்தை சூரி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது தொடர்பான வீடியோவையும் பகிர்ந்த அவர், “இது எனக்கு ஒரு ஸ்பெஷல் ரிவ்யூ. மாமன் படம் பார்த்த பிறகு, இந்த பாப்பா தன்னுடைய தாய்மாமாவை ரொம்பவே மிஸ் பண்ணுறா…

இதுபோன்ற உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய ஒரு தருணம் கிடைத்தது என்பது ரொம்பவே சந்தோஷமாக இருக்கு. தன்னுடைய அன்பான மாமாவை மனதில் வைத்து நினைத்து வருகிற இந்த பாப்பாவின் தாய்மாமாவுக்கு, இந்த படத்தின் வாயிலாக என் அன்பும், மனமார்ந்த வாழ்த்துகளும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

actor soori theatre
இதையும் படியுங்கள்
Subscribe