/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/418_15.jpg)
ஹாலிவுட் இயக்குநர் டேனி பாய்ல் இயக்கத்தில் தேவ் படேல், ஃபிரீடா பின்டோ ஆகியோர் நடிப்பில் 2009ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’. இப்படத்தில் அனில் கபூர், இர்பான் கான், மதுர் மிட்டல் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கிறிஸ்டியன் கால்சன் தயாரித்திருந்த இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். உத்தரபிரதேசத்தை சேர்ந்த எழுத்தாளர் விகாஸ் ஸ்வரூப் எழுதிய கியூ அண்ட் ஏ(Q & A) நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் படமாக்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் 81வது ஆஸ்கர் விருது விழாவில் 8 விருதுகளை வாங்கியது. இதில் ஏ.ஆர் ரஹ்மான் இரண்டு விருதுகளை வாங்கி சாதனை படைத்தார். இதன் மூலம் ஆஸ்கர் விருது வாங்கிய முதல் தமிழர் என்ற பெருமையை பெற்றார். இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான உரிமையை கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட‘பிரிட்ஜ் 7’ நிறுவனம் வாங்கியுள்ளனர். மேலும் படத்தின் தொலைக்காட்சி உரிமையையும் வாங்கியுள்ளனர். இதனால் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக தெரிகிறது. இது குறித்து பேசிய முதல் பாகத்தின் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த பால் ஸ்மித், “பிரிட்ஜ் 7 நிறுவனத்துடன் இணைந்து வேலை செய்ய எங்கள் நிறுவனம் ஆவலோடு இருக்கிறது. ஜமால் கதாபாத்திரத்தின் அடுத்த பயணம் நிறைய புது விஷயங்களை பேசும்” என கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)