skm cinemas first movie

அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கத்திலும், வித்தியாசமான கதைக்களங்களைத்தயாரிக்கும் நோக்கத்திலும் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறது எஸ்.கே.எம் சினிமாஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து பல படங்களைத் தயாரிக்கநடிகரும் தயாரிப்பாளருமான அகில் திட்டமிட்டுள்ளார் .

Advertisment

இந்த நிறுவனத்தின் முதல் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் விஜய் ஆனந்தன் இயக்குகிறார். இதற்கு முன்பாக பல குறும்படங்களை இவர் இயக்கியுள்ளார். ஐந்து இளம் நடிகர்கள் நடிக்க இருக்கும் இப்படத்திற்கு தென்மா இசையமைக்கிறார். இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு எஸ்.கே.ம் சினிமாஸ் நிறுவனத்தையும், படக்குழுவினரையும் வாழ்த்தினார்கள்.

Advertisment