'SK21'; Celebrity join with Sivakarthikeyan again

Advertisment

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோவான சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்து தற்போது முன்னணி ஹீரோவாக மாறியுள்ளார். இதனிடையே 'டான்' படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் 'ப்ரின்ஸ்' படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் 'எஸ்.கே 21' படத்தில் நடிக்கவுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ள இப்படத்தில் சாய்பல்லவி நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் 'எஸ்.கே 21' படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால் தற்போது அனிருத் ஒப்பந்தமாகியிருப்பதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் அனிருத் இசையில் ஏற்கனவே வெளியான 'எதிர் நீச்சல்', 'ரெமோ', 'டாக்டர்', 'டான்' உள்ளிட்ட படங்களின் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.