sk20 film Shoot Begins

டாக்டர்' படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் 'டான்'படத்திலும், இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் 'அயலான்'படத்திலும்நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து இறுதிக்கட்ட பணியில்உள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்தாகபிரபல தெலுங்கு இயக்குநர்அனுதீப் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக 'எஸ்.கே 20' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து சுரேஷ் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. தமன்இசையமைக்கிறார்.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="717f2992-5be1-4899-9245-244e2183270e" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside-ad%20%281%29_9.jpg" />

Advertisment

இந்நிலையில் 'எஸ்.கே 20' படத்தின் படப்பிடிப்பு இன்று(10.2.2022) சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன், சத்யராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்திற்கு பிறகு நடிகர் சத்யராஜ் சிவகார்த்திகேயனுடன் இப்படத்தின் மூலம் இணைந்துள்ளார். தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் பணிகளை விரைந்து முடித்து தீபாவளிக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாககூறப்படுகிறது.