style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
சிவகார்த்திகேயன் நயன்தாராவுடன் நடிக்கும் படத்தை எம்.ராஜேஷ் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இப்படத்திற்கு ‘ஜித்து ஜில்லாடி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் கசிந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்திற்கு 'மிஸ்டர் லோக்கல்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல் கசிந்துள்ளது. இதற்கிடையே இது ரசிகர்களிடம் கலவையான வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பிப்ரவரி 2ஆம் தேதி நாளை அதிகாரபூர்வமாக வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படம் காமெடி என்டெர்டெயினராக உருவாகிறது.