/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-15_0.jpg)
தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான எஸ்.ஜே சூர்யா தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். விஷால் நடிப்பில் உருவாகி வரும் 'மார்க் ஆண்டனி' படத்தில் வில்லனாகவும், வெங்கட் ராகவன் இயக்கும் 'கடமையை செய்' படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இதனிடையே ராதாமோகன் இயக்கும் 'பொம்மை' படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மருது பாண்டியன் உள்ளிட்ட மூன்று பேர் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்நிலையில் 'பொம்மை' படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இதனை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஒரு பொம்மையுடன் உளவியல் ரீதியாகக் காதல் கொள்ளும் கதாநாயகன், அதற்காக கொலையும் செய்கிறான். இதனால் ஏற்படும் சிக்கலான சூழல்களை அவன் எவ்வாறு எதிர்கொள்கிறான் என்பதை விவரிப்பது போல் இந்த ட்ரைலர் வெளியாகியுள்ளது. ரொமாண்டிக் த்ரில்லர் ஜானரில் வெளியாகியுள்ள இந்த ட்ரைலர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)