Advertisment

கமலுடன் மோதும் எஸ்.ஜே. சூர்யா - முன்னணி இயக்குநர் திட்டம்

sj suryah is villain in indian 2

Advertisment

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். முன்னதாக இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சென்னை, திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்தது.

இதையடுத்து படப்பிடிப்புதென்னாப்பிரிக்கா மற்றும் தைவான் உள்ளிட்ட நாடுகளில் நடந்த நிலையில் அங்கு கமலின் காட்சிகளை படமாக்கி முடித்தனர். பின்பு அடுத்தகட்ட படப்பிடிப்பு தென் ஆப்ரிக்காவில் தற்போது நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் வில்லன் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளதாகவும் முதல் முறையாக கமலுடன் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் எஸ்.ஜே. சூர்யா படப்பிடிப்பு முழுவதும் நடந்து முடிந்துள்ளதாகவும் இதற்காக பெருந்தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எஸ்.ஜே. சூர்யா, தற்போது ராதா மோகனின் 'பொம்மை', விஷாலின் 'மார்க் ஆண்டனி', கார்த்திக் சுப்புராஜின் 'ஜிகர்தண்டா 2' உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். ஹீரோ வில்லன் என இரண்டு கதாபாத்திரத்திலும் கவனம் செலுத்தி வரும் எஸ்.ஜே. சூர்யா, ராம் சரணை வைத்து ஷங்கர் இயக்கும் 'கேம் சேஞ்சர்' படத்திலும் நடித்துள்ளார். இதிலும் வில்லனாக நடித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

ACTOR KAMAL HASSHAN director Shankar indian 2
இதையும் படியுங்கள்
Subscribe