Advertisment

விக்ரம் படத்தில் எஸ்.ஜே சூர்யா

sj suryah in in vikram chiyaan 62

Advertisment

விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் உருவாகும் இப்படம் ஏப்ரலில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. ஆனால் அதுவும் தற்போது தள்ளி போகவுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படம் நீண்ட இழுபறிக்கு பின் இம்மாதம் வெளியாகும் என கெளதம் மேனன் தெரிவித்திருந்தார். அதன் பிறகு எந்த அப்டேட்டும் படக்குழு வெளியிடவில்லை.

இதனை தொடர்ந்து தனது 62வது படத்திற்காக சித்தா பட இயக்குநர் எஸ்.யு. அருண்குமாருடன் கூட்டணி வைத்துள்ளார். ரியா ஷிபு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு ஒரு ப்ரோமோ வீடியோவுடன் கடந்த அக்டோபரில் வெளியானது. அதன் பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாதநிலையில் தற்போது புது அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி எஸ்.ஜே சூர்யா இப்படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. எஸ்.ஜே சூர்யா தற்போது இந்தியன் 2, கேம் சேஞ்சர், ‘எல்.ஐ.சி’ (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chiyaan 62 actor vikram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe