Advertisment

சிவகார்த்திகேயனோடு இணையும் எஸ்.ஜே சூர்யா! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

vsZv

நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில், ‘டாக்டர்’ மற்றும் ‘அயலான்’ படங்கள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்த பட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இயக்குநர் அட்லியிடம் ‘மெர்சல்’, ‘பிகில்’ படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய, சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகவுள்ள 'டான்' படத்தில், சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கவுள்ளார். சிவகார்த்திகேயனின் 19வது படமாக உருவாகும் இப்படத்தை லைகா புரடக்‌சன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா, சிவகார்த்திகேயன் புரடக்‌சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.

Advertisment

gdsgd

இப்படத்தில், பணியாற்ற முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடந்துவரும் நிலையில், இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு, பிப்ரவரி 2ஆம் வாரத்தில், கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 30 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. மேலும் சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் நடிக்க நடிகர் எஸ்.ஜே சூர்யா ஒப்பந்தம் ஆகியுள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'டான்' படத்தில், எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடிக்கவுள்ளதாக திரைத்துறையில் பரவலாகப் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisment

vdv

Don
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe