Advertisment

அமிதாப் பச்சனுடன் எஸ்.ஜே சூர்யா... மீண்டும் தொடங்கும் 'உயர்ந்த மனிதன்' திரைப்படம்

sj suryah and Amitabh Bachchan starring Uyarntha Manidhan shooting be start soon

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும், இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே சூர்யா இருவரும் இணைந்து 'உயர்ந்த மனிதன்' என்ற படத்தில் நடித்த வந்தனர். 'மச்சக்காரன்', 'கள்வனின் காதலி' ஆகிய படங்களை இயக்கிய தமிழ்வாணன் இப்படத்தை இயக்கி வந்தார். அமிதாப் பச்சன் நடிக்கும் நேரடி தமிழ்ப்படமாகஉருவாகியஇப்படம் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் எடுக்கப்பட்டு வந்தது. ஆனால் படத்தின் தயாரிப்பு தரப்புக்கும் அமிதாப் பச்சனுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகாரணமாக 'உயர்ந்த மனிதன்' படத்திலிருந்து அமிதாப் பச்சன் விலகியதாக கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து படத்தின் பணிகள் நிறுத்தப்பட்டது.

Advertisment

இந்நிலையில் 'உயர்ந்த மனிதன்' படத்தின்பணிகள் மீண்டும் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. அமிதாப் பச்சனுடன் பிரச்சனை செய்த தயாரிப்பு நிறுவனம் படத்தில் இருந்து விலகி விட்டதால்மீண்டும் அமிதாப் பச்சன் உயர்ந்த மனிதன் படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இப்படத்தை வேறொரு தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறிய அதற்கான ஒப்பந்த நகல் தற்போது வெளியாகியுள்ளது. இதனால் 'உயர்ந்த மனிதன்' படத்தின்படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

amitabh bachchan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe