Advertisment

“சர்வதேச தரம்” - தனுஷ் குறித்து எஸ்.ஜே. சூர்யா

sj suryah about dhanush raayan movie

கேப்டன் மில்லர் படத்தைத் தொடர்ந்து தற்போது தனது 50 ஆவது படப் பணிகளை கவனித்து வருகிறார் தனுஷ். அவரே இயக்கி நடிக்கும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். ராயன் எனத்தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தாண்டிற்குள் இப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

முன்னதாக இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, அபர்ணா பாலமுரளி, செல்வராகவன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாகத்தகவல் வெளியானது. மேலும் வட சென்னையை மையமாக வைத்து ஒரு கேங்ஸ்டர் ஜானரில் இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்பட்டது. இதையடுத்து படத்தில் செல்வராகவன் நடித்திருப்பதை எக்ஸ் தளம் வாயிலாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Advertisment

இந்த நிலையில், இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளதைப் படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. எஸ்.ஜே. சூர்யா கதாபாத்திர லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்போஸ்டரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, படம் குறித்து பதிவிட்ட எஸ்.ஜே. சூர்யா, “தனுஷ் சார், உங்கள் இயக்கத்தில் நடிப்பது சந்தோஷம். அதற்காக நன்றி. நான் முன்னதாக சொன்னது போல இப்படம் ரத்தமும் சதையுமாய் எமோஷ்னல் கலந்து சர்வதேச தரத்தில் இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கோடை விருந்தாக இப்படம் இருக்கும் எனவும் குறிப்பிட்டு படக்குழுவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Raayan actor dhanush
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe