Advertisment

"ஒரு தோல்வி எல்லாவற்றையும் கற்றுத்தரும்" - எஸ். ஜே சூர்யா

sj surya talk about Anyas Tutorial web series

இயக்குநர்பல்லவிகங்கிரெட்டி இயக்கத்தில்ரெஜினாகஸண்ட்ரா, நிவேதிதாசதிஷ்ஆகியோர்ஆன்யா’ஸ்டுடோரியல்என்றஇணையதொடரில் நடித்துள்ளனர். புதுமையானஹாரர்தொடராக உருவாகியுள்ள இந்த தொடரைஆர்காமீடியாஒர்க்ஸ்நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தவெப்தொடர் ஜூலை 1ஆம் தேதிஆஹாஓடிடிதளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது.

Advertisment

இந்நிலையில்ஆன்யா’ஸ்டுடோரியல்குழுவின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் ரெஜினா, நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட படக்குழுவினருடன் இயக்குநர் சுந்தர் சி, எஸ்.ஜே சூர்யா, விஜய் ஆண்டனி ஆகியோர் சிறப்புவிருந்தினராககலந்து கொண்டார்.

Advertisment

இதில் பேசியஎஸ்.ஜே சூர்யா, "அல்லுஅரவிந்த் வேகம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய குழுவும், திறமைமிக்க ஆட்கள் நிறைந்த குழுவாக இருக்கிறார்கள். முருகதாஸ் சார்டீமில்உள்ளஎனர்ஜிடிக்கானநபர் பல்லவி. அவர் இயக்கிய தொடரின் விழாவிற்கு நான் வந்ததுஎனக்குபெருமையான விஷயம்.ரெஜினாஎப்போதும் தன்னுடைய அழகையும், திறமையும் தொடர்ந்துகச்சிதமாகதக்கவைத்துகொண்டுள்ளார். நிவேதிதா,ரெஜினாகஸண்ட்ராஇருவரும் இந்ததொடருக்குபொருத்தமான தேர்வு, இருவரது முக அமைப்பும் சகோதரிகள் போல் அப்படியே இருக்கிறது.

எழுத்தாளரைத்தமிழுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி. விஜய் ஆண்டனிபேயைப்பார்க்க ஆசை என்றார். ஒரு படம்எடுத்துத்தோல்வியடைந்தால், எல்லா பேயையும் பார்த்து விடலாம். ஒரு தோல்வி எல்லாவற்றையும் கற்றுத்தரும்.பாகுபலிபோன்ற படைப்பை எடுத்த ஒரு நிறுவனம், தமிழில் ஒருசீரிஸ்செய்வது மகிழ்ச்சியாக உள்ளது. திறமை வாய்ந்த நபர்கள் இணைந்து இந்த தொடரை உருவாக்கி இருப்பது மகிழ்ச்சி" என்றார்.

Regina Cassendra
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe