SJ Surya

அறிமுக இயக்குநர் வினோத் குமார் இயக்கத்தில் விஷால் லத்தி படத்தில் நடித்துள்ளார். 'ராணா ப்ரொடக்ஷன்' சார்பாக ரமணா மற்றும் நந்தா இணைந்து தயாரித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டீசர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

Advertisment

அந்த நிகழ்வில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா பேசுகையில், “லத்தி படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றிபெறும். விஷால் ரொம்பவும் கஷ்டப்பட்டு முழு ஈடுபாட்டுடன் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். அதேபோல இயக்குநரும் முழு ஈடுபாட்டுடன் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். இவ்வளவு பேரை வைத்துக்கொண்டு ஹைதராபாத்தில் ஷூட் செய்திருக்கிறார்கள். விஷாலுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் மட்டுமில்லாமல் வட இந்தியாவிலும் பெரிய மாஸ் உள்ளது. எல்லோருக்கும் நல்லது பண்ண வேண்டும் என்று அவர் நினைப்பதால் அவருக்கு எல்லாமே நல்லதாக நடக்கிறது. இனியும் நல்லதே நடக்கும்.

விஷாலின் திரைவாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல லத்தி படம் சரியான தொடக்கமாக இருக்கும். டாப் 5 நடிகர்களின் பட்டியலில் விஷாலின் பெயரும் இருந்தது. வெளி வேலைகளில் அவர் கவனம் செலுத்த ஆரம்பித்ததால் சின்ன சரிவு ஏற்பட்டுவிட்டது. விஷாலின் இரண்டாவது இன்னிங்ஸ் லத்தி படத்திலிருந்து தொடங்குகிறது. எல்லா எல்லைகளையும் தாண்டி விரைவில் அவர் உச்சத்தைத் தொடுவார்” எனப் பேசினார்.