Advertisment

“செந்தமிழ் தேன் மொழியாள் மெட்டில் கட்டிபுடிடா பாடல் உருவானது” - எஸ்.ஜே.சூர்யா

168

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த படம் ‘குஷி’.ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்த இப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். இப்படம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்கில் செப்.26ஆம் தேதி வெளியாகிறது. சக்தி ஃபிலிம் ஃபேக்டரியின் சக்திவேலன் வெளியிடுகிறார். இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.     

Advertisment

நிகழ்வில் எஸ்.ஜே.சூர்யா பேசுகையில், “ஒரு படத்தின் கதை கூறும்போதே 2.30 மணி நேரம் கூறிவேன். உதவி இயக்குனர்கள், சண்டைப் பயிற்சியாளர்கள், தயாரிப்பாளர், நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர் இப்படி கதை கூறும் போதே பலமுறை படம் பார்ப்போம். ஒவ்வொரு காட்சியும் படப்பிடிப்பு முடிந்தவுடன் பலமுறை பார்ப்பேன். டப்பிங் பேசும்போது, இசையை இணைக்கும் போது, படத்தொகுப்பு செய்யும் போது, முன்னோட்டம் பார்க்கும் போதும் 1 லட்சம் முறை படம் பார்த்து விடுவேன். பார்வையாளர்களுடன் திரையரங்கில் பார்க்கும் போது, ரசிகர்கள் கொண்டாடுவதைத் தான் பார்க்க முடியுமே தவிர, முதன்முறை பார்த்த அனுபவமே இருக்காது. ஆனால், நீண்ட வருடங்களுக்குப் பிறகு உங்களுடன் இணைந்து இன்று பார்க்கும் போது எனக்கு முதன்முறையாக பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.

கட்டிபுடி பாடலுக்கு எல்லோரும் ரசித்துப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த பாடலை தேவா சாரிடம் கேட்கும்போது, செந்தமிழ் தேன் மொழியாள் மெட்டில் போடுங்கள் என்றேன். அப்படித்தான் கட்டிபுடி பாடல் உருவானது. அதேபோல், மொட்டு ஒன்று மலர்ந்திடும் பாடல் மெட்டுக்கு எழுதாமல் பாட்டுக்கு மெட்டுப் போட்டுக் கொடுத்தார். அப்பாடல் வரிகள் ஒவ்வொன்றும் ஆணுக்கும், பெண்ணுக்கும் இருக்கக் கூடிய ஊடலை அழகாக சொல்லும். அந்த கவிதை வரிகளுக்கு தேவா சார் அற்புதமாக இசையமைத்தார். இப்படத்தில் ஒவ்வொன்றும் தானாகவே அமைந்தது.

விஜய் சாரிடம் கதை கூறிய பிறகு, உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் வேறு கதை சொல்கிறேன் என்றேன். அவர் வேண்டாம், இதுவே நன்றாகத்தானே இருக்கிறது என்றார். இப்படத்திற்கு அழகாக ஒளிப்பதிவு செய்தவர் ஜீவா சார். இன்று அவர் இல்லையென்றாலும், இந்த கணம் அவரை நினைத்துக் கொள்கிறேன். கதை அடுத்தடுத்து பயணிக்கும்போது விவேக் சாரின் பாத்திரம் அடுத்தடுத்த காட்சிகளை இணைக்கும்படியாக இருக்கும். சினிமாத்துறையில் என்னை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றவர் கணக்கு பாராமல் செலவு செய்தது ஏ.எம்.ரத்னம் சார் தான். நான் நடிகனாக வேண்டும் என்று தான் சினிமாவிற்கு வந்தேன். ஆகையால் தான், நான் இயக்கத்தை நிறுத்திவிட்டு நடிக்க வந்துவிட்டேன்” என்றார். 

Advertisment

sj surya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe