தமிழி சினிமாவில் தற்போது பிஸியான நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் எஸ்.ஜே சூர்யா. அவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படங்கள் வெற்றி படமாக அமைந்தது. இதையடுத்து கமல் - ஷங்கர் கூட்டணியில் வெளியான இந்தியன் 2 படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் கைவசம் தனுஷின் ராயன், விக்ரமின் வீர தீர சூரன், விக்னேஷ் சிவனின் எல்.ஐ.சி., கார்த்தியின் சர்தார் 2, தெலுங்கில் நானியுடன் ஒரு படம் என ஏகப்பட்ட படங்களை வைத்துள்ளார். இன்று எஸ்.ஜே.சூர்யா பிறந்தநாள் காண்கிறார். இதையொட்டி திரை பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் அவர் நடித்து வரும் படக்குழுவினர் எனப் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தெலுங்கில் நானியுடன் அவர் நடித்து வரும் படத்தின் சார்பாக அவருக்கு பிறந்தநாள் டீசர் வெளியாகியுள்ளது. இந்தப் படம் தமிழில் சூர்யாவின் சனிக்கிழமை என்ற தலைப்பில் ஆகஸ்ட் 29இல் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எஸ்.ஜே சூர்யா தனது எக்ஸ் பக்கம் மூலமாக நன்றி கூறியுள்ளார். மேலும் ஒரு பதிவில், சூர்யாவின் சனிக்கிழமை படத்தின் டீசரை பகிர்ந்து, “என் அன்பும் ஆருயுருமான நண்பர்களே ராயன் படத்திற்கு பிறகு, தெலுங்கில் நானியுடன் சூர்யாவின் சனிக்கிழமை படத்தில் வில்லனாக நடித்துள்ளேன்” எனக் குறிப்பிட்டு இந்தப் படத்தையும் ஆதரிச்சு அன்பு காட்டுங்க எனக் கேட்டுக்கொண்டுள்ளார். இப்படத்தை டிவிவி என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்க விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ளார். கதாநாயகியாக ப்ரியங்கா மோகனா நடிக்க ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார்.