/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1_330.jpg)
தமிழ் சினிமாவில் வில்லனாகவும் கதாநாயகனாகவும் குணச்சித்திர நடிகராகவும் பல்வேறு பரிமாணங்களில் நடித்துவரும் ஆர்.கே. சுரேஷ் தற்போது ' ஒயிட் ரோஸ்' என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதன் அறிவிப்பு பொங்கல் தினத்தில் வெளியாகியுள்ளது. இதில் இன்னொரு நாயகனாக ரூசோ நடிக்கிறார். இதில் நாயகியாக கயல்' ஆனந்தி நடிக்கிறார். இந்தப் படத்தை ஆர். கே. சுரேஷின் ஸ்டூடியோ 9 நிறுவனமும் ரூசோவின் வெற்றி அரசு நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
இந்தப் படத்தின் மூலம் ராஜசேகரன் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் இயக்குநர் சுசிகணேசனிடம் சினிமா பயின்றவர். மருத்துவமனையில் உள்ள பிணவறையில் நடந்த சில உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது. சைக்கோ திரில்லர் படமான இதன் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்க உள்ளது. இந்தப் படத்தின் டைட்டில் அறிவிப்பை நடிகர் எஸ்.ஜே. சூர்யா வெளியிட்டு படக்குழு வுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)