sj surya to play villan role in nani 31 movie

தெலுங்கு நடிகரான நானி, தசரா படத்தைத்தொடர்ந்து தனது 30வது படமான 'ஹாய் நான்னா' படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடிக்க, அறிமுக இயக்குநர் சவுரியா இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இப்படம் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வருகிற டிசம்பர் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

இப்படத்தை முடித்துவிட்டு தன்னை வைத்து ஏற்கனவே இயக்கிய 'அடடே சுந்தரா' பட இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார் நானி. இப்படத்தை ஆர்.ஆர்.ஆர் பட தயாரிப்பு நிறுவனமான டி.வி.வி. தனய்யா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. இதில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் கமிட்டாகியுள்ளார். இதன் மூலம் 'கேங் லீடர்' படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக நானியுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் வில்லன் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி எஸ்.ஜே. சூர்யா, நானியுடன் மோத ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மகேஷ் பாபு நடித்த ஸ்பைடர் படம் மூலம் தெலுங்கில் வில்லனாக அறிமுகமானார் எஸ்.ஜே சூர்யா. அதில் அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. அதை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ராம் சரணம் நடிக்கும் கேம் சேஞ்சர் படத்தில் நடிக்கிறார். இதில் அவர் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து மீண்டும் தெலுங்கு படத்தில் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடிக்கவுள்ளதாக தெரிகிறது.

முன்னணி பிரபலங்கள் பிரியங்கா மோகனை தொடர்ந்து எஸ்.ஜே. சூர்யாவும் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.