style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரித்து எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி ஷங்கர் இணைந்து நடிக்கும் படம் 'மான்ஸ்டர்'. 'ஒரு நாள் கூத்து' படம் மூலம் பிரபலமான நெல்சன் வெங்கடேசன் இயக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் இப்படம் குறித்து நெல்சன் வெங்கடேசன் பேசும்போது.... "குழந்தைகளை மையமாக வைத்து உருவாகும் படமென்பதால் குடும்பம் மட்டுமின்றி, அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் படம் இருக்கும். எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை படமாக உருவாக்கியுள்ளேன். நாயகன் தேர்வில் எந்த யோசனையுமின்றி எஸ்.ஜே.சூர்யாவை தேர்வு செய்தோம். அவர் தனக்கான பாணியில், எளிமையாக நடித்து அனைவரையும் இதயத்திலும் இடம் பிடிக்கக்கூடியவர். அதுமட்டுமல்லாமல், முதல் காட்சியிலிருந்து கடைசி வரை அவர் தான் மிகவும் பொருத்தமாகவும் இருப்பார். நாயகி பிரியா பவானி ஷங்கரும் தனது கதாபாத்திரத்தின் ஆழத்தைப் புரிந்து கொண்டு சிறப்பாக நடித்திருக்கிறார். ‘ஒரு நாள் கூத்து’ படத்தில் கருணாகரன் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால், இந்தப் படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் நடித்திருக்கிறார்" என்றார். இசை வெளியீடு மற்றும் படத்தின் வெளியீடு ஆகியவை விரைவில் வெளியிடப்படும்.