sj surya Kadamaiyai Sei Video Song released

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான எஸ்.ஜே சூர்யா தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். விஷால் நடிப்பில் உருவாகி வரும் 'மார்க் ஆண்டனி' படத்தில் வில்லனாகவும், ராதாமோகன் இயக்கும் 'பொம்மை' படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இதனிடையே வெங்கட் ராகவன் இயக்கத்தில் 'கடமையை செய்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே சூர்யாவிற்கு ஜோடியாக யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். மொட்டை ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், ராஜசிம்மன், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி.ஆர்.ரமேஷ் மற்றும் எஸ்.ஜாஹிர் ஹுசைன் தயாரித்துள்ள இப்படத்திற்கு அருண் ராஜ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

இந்நிலையில் 'கடமையை செய்' படத்தின் கடமையை செய் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. ஒரு அப்பார்ட்மென்டில் செக்யூரிட்டியின் வேலைகள் மற்றும் அவர்களின் எவ்வாறு பணியாற்றுகிறார்கள் என்பதை ஜாலியாக விவரிக்கும் வகையில் இப்பாடல் வெளியாகியுள்ளது. இப்படம் வருகிற ஜூன் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment