SJ Surya to focus on movement again after 7 years?

Advertisment

அஜித் நடிப்பில் 1999-ஆம் ஆண்டு வெளியான 'வாலி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.ஜே சூர்யா. தான் இயக்கிய முதல் படத்திலே தன் இயக்கத்திற்காக பாராட்டுகளை பெற்றார். அதை தொடர்ந்து 'குஷி', 'நியூ' மற்றும் 'அன்பே ஆருயிரே' போன்ற ஹிட் படங்களை கொடுத்தார். பிறகு நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வந்தார். வில்லன், குணசித்ர கதாபாத்திரம் போன்றவற்றில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இதனிடையே நீண்ட காலம் கழித்து இவர் இயக்கத்தில் 'இசை' படம் வெளியானது. இந்த படத்தில் இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்தார்.

இந்நிலையில் எஸ்.ஜே சூர்யா மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் ஒரு காரை மையப்படுத்தி உருவாகவுள்ளதாகவும் அதற்காக ஒரு காரை ஜெர்மனியில் புக் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யாவே கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.