Advertisment

sj surya and silambarasan starring on driving license tamil remake

இயக்குநர்வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு 'மாநாடு' படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே சூர்யா நடிக்க சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். இப்படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றதோடுமட்டுமல்லாமல்சிம்பு மற்றும் எஸ் ஜே சூர்யா இவர்களின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. சொல்லப்போனால் சிம்புவின் நடிப்பைத் தாண்டி எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. இதனால் இவர்கள் இருவரும்எப்போது மீண்டும் இணைந்து நடிப்பார்கள்என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Advertisment

இந்நிலையில் நடிகர்கள் சிம்பு மற்றும் எஸ்.ஜே சூர்யா இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த 2019ஆம் ஆண்டு மலையாளத்தில் பிருத்விராஜ் மற்றும்சுராஜ் வெஞ்சாரமூடு இருவரும் இணைந்து நடித்திருந்த 'டிரைவிங் லைசென்ஸ்' திரைப்படம் வெளியாகிநல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்திற்கு மலையாளத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து தமிழில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இதன் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர் ஒருவர் சிம்பு மற்றும் எஸ்.ஜே சூர்யா இருவரையும் நடிக்க வைக்கபேச்சுவார்த்தைநடத்தி வருவதாகக்கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வஅறிவிப்பு விரைவில்வெளியாகும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நடிகர் சிம்பு தற்போது கெளதம்மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.