நடிகரும், இயக்குனருமான எஸ் ஜே சூர்யா தற்போது அமிதாப்பச்சனுடன் உயர்ந்த மனிதன் மற்றும் ராதா மோகன் இயக்கத்தில் பொம்மை படத்தில் நடித்துவரும் நிலையில் தான் அஜித் படத்தில் நடிப்பது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் எஸ் ஜே சூர்யா விளக்கமளித்து பேசும்போது...

Advertisment

sj surya

''ஒரு படத்தை தயாரிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. எல்லாவற்றையும் திறன்பட கையாண்டால் தான் எல்லாம் சரியாக நடக்கும். குறிப்பாக நேரத்தை கவனமாகவும், சரியாகவும் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம். எந்த ஒரு தயாரிப்பாளரும் பல போராட்டங்களுக்கு பிறகே வெற்றி பெறுகின்றனர். அதுபோல் பல போராட்டங்களுக்கு பிறகு நெஞ்சம் மறப்பதில்லை படம் பல தடைகளை தாண்டி இந்த தடவை நிச்சயமாக வெளி வருகிறது. அடுத்த மாதத்தில் நீங்கள் படத்தை எதிர்பார்க்கலாம். அஜித் படத்தில் நான் நடிப்பதாக சொல்வதில் உண்மை இல்லை. நான் தல படத்தில் நடிக்கவில்லை. இதுவரை யாரும் என்னை தொடர்பும் கொள்ளவில்லை. இருந்தும் அஜித் கூப்பிட்டால் கண்டிப்பாக நான் அவருடன் நடிப்பேன். இதற்காக நல்ல கதைக்களம் அமையவேண்டும். அப்படி அமையும் பட்சத்தில் நாங்கள் இருவரும் கண்டிப்பாக சேர்ந்து நடிப்போம். நானும் அதற்கு ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறேன்'' என்றார்.

Kamal