Advertisment

எஸ்.ஜே சூர்யாவை வில்லனாக தேர்வு செய்த ஷங்கர்

sj surya act with ramcharan rc15 movie

Advertisment

இயக்குநர் ஷங்கர், பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி இருவரையும் வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். தற்காலிகமாக 'ராம் சரண் 15' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரித்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைக்க, ராம் சரண் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ‘ஆர்சி 15’ படத்தில் எஸ்.ஜே சூர்யா நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அத்துடன் படக்குழு, எஸ்.ஜே சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா, வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் படமாக உருவாகி வரும் இப்படம் அடுத்தாண்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ramcharan RC15
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe