Advertisment

"எனக்கு மிகப்பெரிய விருது கிடைத்திருப்பதாக உணர்கிறேன்" - எஸ்.ஜே. சூர்யா நெகிழ்ச்சி

sj surya talk about rajinikanth anad maanaadu movie

Advertisment

இயக்குநர்வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு ‘மாநாடு’ படத்தில் நடித்துள்ளார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.பல பிரச்சனைகளைத் தாண்டி கடந்த 25ஆம் தேதி திரையரங்கில் வெளியான இப்படம்,வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைபெற்றுவருகிறது.இதனைத் தொடர்ந்து ‘மாநாடு’ படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர்கள் சிம்பு, எஸ்.ஜே. சூர்யா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோருக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="54f9b5c2-adfa-4213-96b6-1e771c6f03b8" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside-ad_58.jpg" />

இத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தஎஸ்.ஜே. சூர்யா, "சூப்பர் ஸ்டார்ரஜினிகாந்த் பாராட்டியதால்இன்று என் நடிப்பு திறமைக்காக மிகப்பெரியவிருதுகிடைத்திருப்பதாக உணர்கிறேன். உங்களுடைய பாராட்டு மிகுந்த ஊக்கத்தை தருகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

ACTORS RAJINIKANTH maanaadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe