Advertisment

"படம் பேசியதை கண்ணால பார்த்தோம்" - எஸ்.ஜே சூர்யா மகிழ்ச்சி

sj surya about jigarthanda 2

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. 2014ஆம் ஆண்டு வெளியான 'ஜிகர்தண்டா' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இப்படத்தை கார்த்திகேயன் சந்தானம் மற்றும் கதிரேசன் தயாரித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை பணிகளை மேற்கொண்டுள்ளார்.

Advertisment

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தயில், இன்று தீபாவளியை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாகியுள்ளது. முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் கார்த்திக் சுப்புராஜ், ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் பலர் திரையரங்கில் பார்த்து மகிழ்ந்தனர்.

Advertisment

பின்பு செய்தியாளர்களை சந்தித்த எஸ்.ஜே சூர்யா, "பட ரிலீஸுக்கு முன்பு படம் பற்றி நாம பேசக்கூடாது, படம் தான் பேசவேண்டும் என கார்த்திக் சுப்புராஜ் சொன்னதாக பேசினோம். அதனால் ரசிகர்களுடன் இன்று முதல் காட்சியை பார்த்து, படம் பேசியதை கண்ணால பார்த்தோம். மக்கள் சந்தோஷப்பட்டதை காதால் கேட்டோம். ஒரு எமோஷனலுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கொடுத்தார்கள். ஒரு தமிழனுடைய படம் உலகமெங்கும் ஒரு நல்ல பெயரை எடுத்து கொண்டிருக்கிறது. அது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. சந்தோஷத்தை சொல்வதற்கு அளவே இல்லை. ஒரு மைல் கல்லாக இப்படம் அமைந்தது. இறைவியில் எனக்கு எப்படி ஒரு முன்னேற்றம் கிடைத்ததோ இந்த படமும் அப்படி அமைந்தது" என்றார்.

actor raghava lawrence
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe