sj surya about dhanush movie neek

தனுஷ் தயாரித்து, இயக்கி வரும் திரைப்படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. இப்படத்தில் தனுஷின் சகோதிரி மகன் பவிஷ் நாராயண், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உள்ளிட பலர் முதன்மை வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

Advertisment

இப்படத்தின் முதல் பாடலான ‘கோல்டன் ஸ்பாரோ...’ வருகிற 30ஆம் தேதி வெளியாகும் என்றும் இப்பாடலில் பிரியங்கா மோகன் கேமியோ ரோலில் நடனமாடியுள்ளதாகவும் போஸ்டருடன் படக்குழு சமீபத்தில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த பாடல் குறித்து எஸ்.ஜே.சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “தனுஷூடன் இணைந்து இந்த பாடலை பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது, அதில் பிரியங்கா மோகன் க்யூட்டாக நடனமாடியிருந்தார். சிம்பிளான நடனத்துடன் க்யூட்டான மாமியாக அவர் நடனமாடியது மிகவும் பிடித்திருந்தது. இந்த பாடலை தனுஷின் மூத்த மகன் யாத்ரா எழுதியுள்ளார்” என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

Advertisment

இதையடுத்து ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படக்குழு சார்பில், ‘கோல்டன் ஸ்பாரோ...’ பாடல் குறித்த புது போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் ‘தெருக்குரல்’ அறிவு இப்பாடாலை எழுதியுள்ளாதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் அதில் சுபலாஷினி, ஜி.வி.பிரகாஷ், தனுஷ், அறிவு ஆகியோர் இணைந்து பாடியிருப்பதாக தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து தனுஷின் மேலாளர் தனது எக்ஸ் பக்கத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் பதிவுக்கு பதிலளித்துள்ளார். அதில், “இந்த பாடலை அறிவு எழுதியுள்ளார், ஆனால், இந்த பாடலில் சில வரிகளை மட்டும் தனுஷ் மகன் யாத்ரா எழுதியுள்ளார்” என்று விளக்கம்கொடுத்துள்ளார்.