மிஷ்கினுடன் கைகோர்க்கும் எஸ்.ஜே.சூர்யா?

sj surya

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான மிஷ்கின், பிசாசு 2 படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்க, கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.

alt="ad " data-align="center" data-entity-type="file" data-entity-uuid="bda6bb26-6d82-4529-bf18-8b809c674a77" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/udanpirappe-article-inside-500x300_4.jpg" />

கடந்த ஆண்டின் இறுதியில் பூஜையுடன் படப்பிடிப்பைத் தொடங்கிய படக்குழு, தற்போது மொத்த படப்பிடிப்பையும் நிறைவுசெய்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது. இந்த நிலையில், மிஷ்கின் அடுத்தாக இயக்கும் படம் குறித்து புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, மிஷ்கினின் அடுத்த படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. பிசாசு 2 படத்தை தயாரித்துவரும் ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்க உள்ளதாம். பிசாசு 2 படத்தின் ரிலீஸ் நெருங்கும்போது, மிஷ்கின் - எஸ்.ஜே.சூர்யா - ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் கூட்டணியில் உருவாகும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

director mysskin
இதையும் படியுங்கள்
Subscribe