Skip to main content

"எட்டு நாள் வேலை ஐந்து நாளில் முடிந்தது..." - மாநாடு அப்டேட் கொடுத்த எஸ்.ஜே.சூர்யா!

Published on 26/10/2021 | Edited on 26/10/2021

 

sj Surya

 

வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மாநாடு’. இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படம் வரும் தீபாவளி தினத்தையொட்டி வெளியாக இருந்த நிலையில், திடீரென தீபாவளி வெளியீட்டில் இருந்து பின்வாங்கி மாநாடு படக்குழு, நவம்பர் 25ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவித்தது.

 

இந்த நிலையில், மாநாடு படத்திற்கான டப்பிங் பணிகளைத் தான் நிறைவுசெய்துவிட்டதாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "என்னுடைய காட்சிகளுக்கான எட்டு நாள் டப்பிங் வேலையை ஐந்து நாளில் முடித்துவிட்டேன். என்னுடைய நாடி, நரம்பு, கழுத்து, முதுகிற்கு குறைந்தபட்சம் பத்து நாட்களுக்காவது ஓய்வு தேவைப்படும். அதிக வேலை காரணமாக வலி பின்னுது. ஆனால், படத்தின் இறுதி வடிவத்தைப் பார்த்துவிட்டதால் ஒன்று கூறுகிறேன். தீபாவளி நவம்பர் 25 தான்டா" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சர்வதேச தரம்” - தனுஷ் குறித்து எஸ்.ஜே. சூர்யா

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
sj suryah about dhanush raayan movie

கேப்டன் மில்லர் படத்தைத் தொடர்ந்து தற்போது தனது 50 ஆவது படப் பணிகளை கவனித்து வருகிறார் தனுஷ். அவரே இயக்கி நடிக்கும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். ராயன் எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தாண்டிற்குள் இப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, அபர்ணா பாலமுரளி, செல்வராகவன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் வட சென்னையை மையமாக வைத்து ஒரு கேங்ஸ்டர் ஜானரில் இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்பட்டது. இதையடுத்து படத்தில் செல்வராகவன் நடித்திருப்பதை எக்ஸ் தளம் வாயிலாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார். 

இந்த நிலையில், இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளதைப் படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. எஸ்.ஜே. சூர்யா கதாபாத்திர லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.  இப்போஸ்டரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, படம் குறித்து பதிவிட்ட எஸ்.ஜே. சூர்யா, “தனுஷ் சார், உங்கள் இயக்கத்தில் நடிப்பது சந்தோஷம். அதற்காக நன்றி. நான் முன்னதாக சொன்னது போல இப்படம் ரத்தமும் சதையுமாய் எமோஷ்னல் கலந்து சர்வதேச தரத்தில் இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கோடை விருந்தாக இப்படம் இருக்கும் எனவும் குறிப்பிட்டு படக்குழுவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.  

Next Story

“கடுமையான வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளேன்” - எஸ்.ஜே சூர்யா

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
sj surya suffering from viral fever

எஸ்.ஜே. சூர்யா தற்போது கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2, ஷங்கர் - ராம்சரண் கூட்டணியில் உருவாகும் கேம் சேஞ்சர், விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகும் ‘எல்.ஐ.சி’ (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

இந்த நிலையில் தீவிர வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக எஸ்.ஜே. சூர்யா தெரிவித்துள்ளார். தன்னை ஒரு பட நிகழ்ச்சிக்கு அழைத்த நிலையில் அதற்கு வரமுடியாமல் போனதற்கான காரணத்தை பகிர்ந்த பதிவில் இதை குறிப்பிட்டுள்ளார். பாபி சிம்ஹா, மேத்யூ வர்கீஸ், வேதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ரஸாக்கர். கூடூர் நாராயண ரெட்டி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை யாத சத்யநாராயணா இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்ட நிலையில் இதில் கலந்து கொள்ளும்படி எஸ்.ஜே சூர்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

ஆனால் இதில் கலந்துகொள்ளாத சூழலில் இருப்பதாக தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “டியர் தம்பி பாபி சிம்ஹா கடுமையான வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. மன்னிக்கவும் தம்பி. மேலும் படத்தின் வெற்றி சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவிற்கு கீழ் ரசிகர்கள் பலரும் எஸ்.ஜே சூர்யாவின் உடல் நலம் தேறி வருமாறு கமெண்ட் செய்த நிலையில், அது தொடர்பாக பதிவிட்ட எஸ்.ஜே சூர்யா, “4வது நாளாக முன்னேறி வருகிறோம். அன்பிற்காக எனது நண்பர்கள் அனைவருக்கும் நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.