‘ஒரு நாள் கூத்து’இயக்கிய நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மான்ஸ்டர்'. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்தை, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். இப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கை குழு. வருகிற மே 17ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கும் நிலையில், இன்று சென்னையில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

Advertisment

sj surya

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அப்போது பேசிய எஸ்.ஜே. சூர்யா, “படத்தின் வெற்றி, தோல்வி நம் கையில் இல்லை. படப்பிடிப்பில் சந்தோஷமாகப் பணிபுரிந்தால், அது மக்களிடையே அப்படியே கடத்தும்.

Advertisment

நான் நடித்து முதல் 'U' சான்றிதழ் வாங்கிய படம் 'மான்ஸ்டர்'. 'வாலி' படத்தோட தயாரிப்பாளர் சக்கரவர்த்தி, 'பேசாமல் உங்க படத்துக்கு 'U'என்று பெயர் வைச்சுடுங்க. ஏனென்றால், U சான்றிதழ் கிடைக்க வாய்ப்பே கிடையாது' என்று கிண்டலாகச் சொன்னார்.என் படத்துக்கு 'U' சான்றிதழ் வாங்குவது அவ்வளவு பெரிய கனவாக இருந்தது" என்று நகைச்சுவையாக கூறிய எஸ்.ஜே. சூர்யா.

வாலி படத்தைத் தயாரித்தவர் ‘நிக் ஆர்ட்ஸ்’ சக்ரவர்த்தி ஆவார். அவர் ஒரு காலத்தில் அஜித்தின் நெருங்கிய நண்பர். அஜித்தை வைத்து பல படங்களை வரிசையாகத் தயாரித்தவர். ‘ரெட்ட ஜடை வயசு’ என்ற படம் தோல்வி அடைந்ததால் இவரிடம் சம்பளம் வாங்காமல் ‘வாலி’ படத்தில் நடித்துக்கொடுத்தார். பிற்காலத்தில் இருவரும் பிரிந்தனர்.