'இடியட்' படத்தை தொடர்ந்து மிர்ச்சி சிவா 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்' படத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா இயக்கும் இந்த படத்தில் மேகா ஆகாஷ், அஞ்சு குரியன், மா.கா.பா ஆனந்த், ஷாரா, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர். 'லார்க்' ஸ்டுடியோஸ் சார்பாக கே.குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார்.
இந்நிலையில் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் பிரபல 'மார்வெல்' நிறுவனம் உருவாக்கியுள்ள 'ஹல்க்' மற்றும் 'அயர்ன் மேன்' கதாபாத்திரம் இடம்பெற்றுள்ளது. இரு கதாபாத்திரமும் சிவாவை பிடித்து வைத்திருப்பது போல் வெளிவந்திருக்கும் இப்போஸ்டர் சமூக வலைத்தளத்தில் மார்வெல் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.