Advertisment

'எனக்கு விசிட்டிங் கார்டாய் இருக்கிற சிவகார்த்திகேயன்'- இயக்குனர் பாண்டிராஜ்

pandiraj

நெருப்புடா நெருங்குடா பாடல் மூலமாக பரவலாக பேசப்பட்டுவந்த பாடலாசிரியரும் பாடகருமான அருண்ராஜா காமராஜ் இயக்கும் திரைப்படம் ’கனா’, அப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன்தான் தயாரிக்கிறார்.

Advertisment

மேலும், அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சத்தியராஜ் நடிக்கிறார்கள். தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

Advertisment

அதில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் பாண்டிராஜ், பேசத்தொடங்கும் முன்னே தொகுப்பாளருக்கு மூன்று கட்டளையிட்டார்."எல்லாருக்கும் வணக்கம். மூணு விஷயம் ஒன்னு, என்கிட்ட விளையாடக்கூடாது. இரண்டு, கேள்வி கேட்கக்கூடாது. மூணு, நான் பேசிட்டு இருக்கும்போது இடையில் கமென்ட் அடிக்கக்கூடாது, என்று தன்னுடைய பேச்சைத் தொடங்கினார்.

”முதலில், இந்தப் படத்தின் இசை அமைப்பாளருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அடுத்ததாக பாடகி ஆராதனா குட்டிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். வீட்டுக்கு கூட்டிட்டு போய் திருஷ்டி சுத்தி போடுங்க, என் கண்ணே பட்டிருச்சு. ஆனால் குழந்தைகளை வைத்து நான் படம் எடுத்தால், ஆராதனாவ நடிக்ககூப்பிடுவேன் கண்டிப்பாக அனுப்பிவைக்கணும். சில படங்களெல்லாம் முதல் நாளிலிருந்தே 'பாசிட்டிவ்' பரவிட்டே இருக்கும். இந்த படமும் அப்படிப்பட்ட படம்தான் இது. ஏன் என்றால் இப்படத்தை பற்றி அடிக்கடி சத்யாராஜ் சார்,அவ்வளவு பாஸிட்டிவா 'ரொம்ப நல்ல படம், இதிலும் விவசாயம் பற்றி வருகிறது, ஸ்போர்ட்ஸ் பற்றி வருகிறது, இதுபோன்று பேசிக்கொண்டே இருப்பார். இன்னொரு பக்கம் இளவரசன் அண்ணன், இந்தப்படத்தை பற்றியே பேசிட்டு இருப்பாரு. வெளியே 'டப்பிங்' போனாலும் அதையேதான் சொல்லுவாங்க, போகின்ற இடம் எல்லாம் இந்தப்படத்தை பற்றி பாஸிட்டிவாவே பேசிட்டு இருப்பாங்க. அதே மாதிரி முதல் முறையா போஸ்டர் பாக்கும்போதும் அப்படி ஒரு பாஸிட்டிவ், அவ்வளவு ஒரு எனர்ஜி இருந்தது.

அதே மாதிரி இந்த படத்தில் விவசாயத்தை பற்றி பேசி இருக்கீங்க, பெண்களுக்கான 'ஸ்போர்ட்ஸ்' பற்றி பேசி இருக்கீங்க, கண்டிப்பா இந்தப் படம் ஒரு உண்மையான, நேர்மையான படமாக இருக்கும் என்கிற ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஏன் என்றால் அருண்ராஜா என்னும் பெயர் பின்னால் காமராஜ் என்று இருக்கிறது. அதனால் இது ஒரு நேர்மையான படமாக இருக்கும் என்று தோணுகிறது. அருண்ராஜா, நல்ல ஒரு பாடலாசிரியர், பாடகர், நடிகர், இப்ப நல்ல ஒரு இயக்குனர் என்று கனா டீசரை பாக்கும்போது தெரிகிறது. உண்மையில் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அதே மாதிரி 'தர்ஷன், ஐஸ்வர்யா ராஜேஷ்' ரெண்டு பேரும் மிக அழகா பண்ணியிருக்கிறார்கள். ரொம்ப பேர் கேப்பாங்க 'ஏன் உங்க படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷை நடிக்க வைக்க மாற்றிங்கனு. கண்டிப்பா, ஒரு நல்ல கேரக்ட்டர் அமையும்போது பண்ணலாம்னு சொல்லுவன். உங்கப் படத்தை எல்லாம் பாத்திருக்கேன் நானே அவங்கள 'ஒரு பெண் தனுஷ்' அப்படினு சொல்லுவேன்; கண்டிப்பா சீக்கரம் சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம்.

சில மேடைகள்தான் எமோஷனா இருக்கும், சில மேடைகள் எல்லாம் காமெடியா பேசிட்டுப்போயிடுவோம். என்னமோ தெரியல இந்த மேடை ரொம்ப எமோஷனல் மேடையா இருக்கு. பொதுவா வெளிய போய்ட்டிருப்போம் திடிர்னு 'சார்' அப்படினுவங்க, நம்ம 'சொல்லுங்க' அப்டின்னுவோம்; அவங்க மனைவியோட வந்திருப்பாங்க, 'யாருனு தெரிதா'னு அவங்க மனைவியை பாத்துக் கேப்பாங்க. நம்மள மேலையும், கீழையும் பாத்துட்டு 'தெரிலையே' அப்படினுவாங்க. அப்புறம் 'ஏய், இயக்குனர் பாண்டிராஜ்' அப்படினு அவங்க கணவர் சொல்லுவாரு, அப்பவும் அவங்களுக்கு தெரியாது. அப்பறமா 'சிவகார்த்கேயனை அறிமுகம் செய்தாரே' அப்படின்னு சொல்லுவாங்க. அதுக்கு பிறகுதான் முகம் பிரைட்டா சிரிப்பாங்க. நேஷனல் அவார்ட், ஆசியா அளவில் தங்க யானை விருதுலாம் வாங்கியிருக்கேன்.அதெல்லாம் அவர்களுக்கு தெரியாது. ஆனால் சிவகார்த்திகேயனை அறிமுகம் செய்ததற்கு பல இடத்தில கிரெடிட் கிடைக்கும். அவ்வாறு எனக்கு விசிட்டிங் கார்டாய் இருக்கிற சிவகார்த்திகேயனுக்கு நன்றி.

நம்ம வெற்றிபெற்று வரும்போது, நம்மகூட வந்தவர்களும் வெற்றிபெறும்போது, சிவா என்னைவிட அதிகம் வெற்றிபெரும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தியேட்டர், டிஸ்டிபியூட்டர்ஸ்லாம், சிவா படம் எப்போ வரும், எப்போ வாங்கி, வெளியிடலாம்னு சந்தோசஷமாக இருக்காங்க. அதில் எனக்கும் மிக சந்தோசம். ரொம்ப கனவுகளோட இந்தப் படத்தை பண்ணிட்டு இருக்கீங்க, உங்கள் கனவுகள் நிஜமாகவும், இந்தக் கனா வெள்ளி விழா காணவும் வாழ்த்துகிறேன். நன்றி வணக்கம்.” என்று கூறினார்.

taamilcinemaupdates aishwaryarajesh sivakarthikeyan arunrajakamaraja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe