Skip to main content

'எனக்கு விசிட்டிங் கார்டாய் இருக்கிற சிவகார்த்திகேயன்'- இயக்குனர் பாண்டிராஜ்

Published on 24/08/2018 | Edited on 24/08/2018

 

pandiraj

நெருப்புடா நெருங்குடா பாடல் மூலமாக பரவலாக பேசப்பட்டுவந்த பாடலாசிரியரும் பாடகருமான அருண்ராஜா காமராஜ் இயக்கும் திரைப்படம் ’கனா’, அப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன்தான் தயாரிக்கிறார். 

 

மேலும், அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சத்தியராஜ் நடிக்கிறார்கள். தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

 

 

அதில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் பாண்டிராஜ், பேசத்தொடங்கும் முன்னே தொகுப்பாளருக்கு மூன்று கட்டளையிட்டார்."எல்லாருக்கும் வணக்கம். மூணு விஷயம் ஒன்னு, என்கிட்ட விளையாடக்கூடாது. இரண்டு, கேள்வி கேட்கக்கூடாது. மூணு, நான் பேசிட்டு இருக்கும்போது இடையில் கமென்ட் அடிக்கக்கூடாது, என்று தன்னுடைய பேச்சைத் தொடங்கினார்.

 

”முதலில், இந்தப் படத்தின் இசை அமைப்பாளருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அடுத்ததாக பாடகி ஆராதனா குட்டிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். வீட்டுக்கு கூட்டிட்டு போய் திருஷ்டி சுத்தி போடுங்க, என் கண்ணே பட்டிருச்சு. ஆனால் குழந்தைகளை வைத்து நான் படம் எடுத்தால், ஆராதனாவ நடிக்ககூப்பிடுவேன் கண்டிப்பாக அனுப்பிவைக்கணும்.  சில படங்களெல்லாம் முதல் நாளிலிருந்தே 'பாசிட்டிவ்' பரவிட்டே இருக்கும். இந்த படமும் அப்படிப்பட்ட படம்தான் இது. ஏன் என்றால் இப்படத்தை பற்றி அடிக்கடி சத்யாராஜ் சார்,அவ்வளவு பாஸிட்டிவா  'ரொம்ப நல்ல படம்,  இதிலும் விவசாயம் பற்றி வருகிறது, ஸ்போர்ட்ஸ் பற்றி வருகிறது, இதுபோன்று பேசிக்கொண்டே இருப்பார். இன்னொரு பக்கம் இளவரசன் அண்ணன், இந்தப்படத்தை பற்றியே பேசிட்டு இருப்பாரு. வெளியே 'டப்பிங்' போனாலும் அதையேதான் சொல்லுவாங்க, போகின்ற இடம் எல்லாம் இந்தப்படத்தை பற்றி பாஸிட்டிவாவே பேசிட்டு இருப்பாங்க. அதே மாதிரி முதல் முறையா போஸ்டர் பாக்கும்போதும் அப்படி ஒரு பாஸிட்டிவ், அவ்வளவு ஒரு எனர்ஜி இருந்தது.

 

 

அதே மாதிரி இந்த படத்தில் விவசாயத்தை பற்றி பேசி இருக்கீங்க, பெண்களுக்கான 'ஸ்போர்ட்ஸ்' பற்றி பேசி இருக்கீங்க, கண்டிப்பா இந்தப் படம் ஒரு உண்மையான, நேர்மையான படமாக இருக்கும் என்கிற ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஏன் என்றால் அருண்ராஜா என்னும் பெயர் பின்னால் காமராஜ் என்று இருக்கிறது. அதனால் இது ஒரு நேர்மையான படமாக இருக்கும் என்று தோணுகிறது. அருண்ராஜா, நல்ல ஒரு பாடலாசிரியர், பாடகர், நடிகர், இப்ப நல்ல ஒரு இயக்குனர் என்று கனா டீசரை பாக்கும்போது தெரிகிறது. உண்மையில் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அதே மாதிரி 'தர்ஷன், ஐஸ்வர்யா ராஜேஷ்' ரெண்டு பேரும் மிக அழகா பண்ணியிருக்கிறார்கள். ரொம்ப பேர் கேப்பாங்க 'ஏன் உங்க படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷை நடிக்க வைக்க மாற்றிங்கனு. கண்டிப்பா, ஒரு நல்ல கேரக்ட்டர் அமையும்போது பண்ணலாம்னு சொல்லுவன். உங்கப் படத்தை எல்லாம் பாத்திருக்கேன் நானே அவங்கள  'ஒரு பெண் தனுஷ்' அப்படினு சொல்லுவேன்; கண்டிப்பா சீக்கரம் சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம்.

 

 

சில மேடைகள்தான் எமோஷனா இருக்கும், சில மேடைகள் எல்லாம் காமெடியா பேசிட்டுப்போயிடுவோம். என்னமோ தெரியல இந்த மேடை ரொம்ப எமோஷனல் மேடையா இருக்கு.  பொதுவா வெளிய போய்ட்டிருப்போம் திடிர்னு 'சார்' அப்படினுவங்க, நம்ம 'சொல்லுங்க' அப்டின்னுவோம்; அவங்க மனைவியோட வந்திருப்பாங்க, 'யாருனு தெரிதா'னு அவங்க மனைவியை பாத்துக் கேப்பாங்க. நம்மள மேலையும், கீழையும் பாத்துட்டு 'தெரிலையே' அப்படினுவாங்க. அப்புறம் 'ஏய், இயக்குனர் பாண்டிராஜ்' அப்படினு அவங்க கணவர் சொல்லுவாரு, அப்பவும் அவங்களுக்கு தெரியாது. அப்பறமா 'சிவகார்த்கேயனை அறிமுகம் செய்தாரே' அப்படின்னு சொல்லுவாங்க. அதுக்கு பிறகுதான் முகம் பிரைட்டா சிரிப்பாங்க. நேஷனல் அவார்ட், ஆசியா அளவில் தங்க யானை விருதுலாம் வாங்கியிருக்கேன்.அதெல்லாம் அவர்களுக்கு தெரியாது. ஆனால் சிவகார்த்திகேயனை அறிமுகம் செய்ததற்கு பல இடத்தில கிரெடிட் கிடைக்கும். அவ்வாறு எனக்கு விசிட்டிங் கார்டாய் இருக்கிற சிவகார்த்திகேயனுக்கு நன்றி.

 

 

நம்ம  வெற்றிபெற்று வரும்போது, நம்மகூட வந்தவர்களும் வெற்றிபெறும்போது, சிவா என்னைவிட அதிகம் வெற்றிபெரும்போது மிகவும் சந்தோஷமாக  இருக்கிறது. தியேட்டர், டிஸ்டிபியூட்டர்ஸ்லாம், சிவா படம் எப்போ வரும், எப்போ வாங்கி, வெளியிடலாம்னு சந்தோசஷமாக இருக்காங்க. அதில் எனக்கும் மிக சந்தோசம். ரொம்ப கனவுகளோட  இந்தப் படத்தை  பண்ணிட்டு இருக்கீங்க, உங்கள் கனவுகள் நிஜமாகவும், இந்தக் கனா வெள்ளி விழா காணவும் வாழ்த்துகிறேன். நன்றி வணக்கம்.” என்று கூறினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கனா' ஏற்படுத்திய ஸ்பார்க்கில் இதை நாங்க செஞ்சோம்' - இளைஞர்களை தூண்டிய சிவகார்த்திகேயன்

Published on 20/04/2019 | Edited on 20/04/2019

இயக்குனர் பொன்ராம் & இயக்குனர் எம்.பி.கோபி அவர்களின் சொந்த ஊரான உசிலம்பட்டியில் அவர்கள் படித்த அரசு மேல் நிலைப்பள்ளியில், உசிலம்பட்டி வட்டார இளைஞர்களையும் மாணவர்களையும் ஊக்கு விப்பதற்காக ஒரு மாபெரும் இரண்டு நாள் கிரிக்கெட் விழா நடத்தினர். அதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பதினாறு அணிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற அணிக்கு திரைப்பட நடிகர் தயாரிப்பாளர் திரு.சிவகார்த்திகேயன் அவர்கள் அணியினரை சென்னைக்கு வரவழைத்து ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாகி வரும் 'மிஸ்டர் லோக்கல்' படப்பிடிப்பில் மதியம் விருந்தும் விருதும் கொடுத்து அவர்களை கௌரவப்படுத்தினார்.

 

sivakarthikeyan

 

கிராமத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த எங்களுக்கு சென்னையில் திரு.சிவகார்த்திகேயன் அவர்களின் கரங்களால் விருது வழங்கியதை நினைத்து பெரும் அகிழ்ச்சியடைகிறோம் என்று வெற்றி பெற்ற அணியினர் கூறினர். இதுகுறித்து இயக்குநர்கள் பொன்ராம் & எம்.பி.கோபி அவர்கள் பேசும்போது... "நாங்கள் படித்த அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு விழா  நடத்த வேண்டுமென்று ரொம்ப நாள் ஆசை. அப்போதுதான் திரு.சிவகார்த்திகேயன் அவர்களின் தயாரிப்பில் வெளிவந்த 'கனா' படம் எங்களுக்கு தூண்டுதலாக இருந்தது. அந்த ஸ்பார்க்கில் எங்கள் ஊரில் கிரிக்கெட் மேட்ச் நடத்தலாம் என்று முடிவு எடுத்தோம்.

 

 

அதன் காரணமாக திரு.சிவகார்த்திகேயன் அவர்களிடம் நாங்கள் நடத்தும் கிரிக்கெட் விழாவிற்கு வருகை தருமாறு அன்போடு அழைத்தோம் அவர் இடைவிடாத படப்பிடிப்பில் இருக்கும் காரணத்தால் விழாவில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை இருப்பதால் அதற்கு பதிலாக அவருடைய கனா பட ஹீரோ தர்ஷன் அவர்களையும் அந்த படத்தில் காமெடியனாக நடித்த டேனியல் பாக்கியராஜ் அவர்களையும் அவர் ரசிகர் மன்ற மாநில  தலைவர் மோகன் தாஸ் அவர்களையும் & மிஸ்டர் லோக்கல் பட இயக்குனர் ராஜேஷ்.எம்  அவர்களையும் விழாவிற்கு அனுப்பி வைத்தார். அது மட்டும் இல்லாமல் வெற்றி பெற்ற அணியினரை சென்னைக்கு வரவழைத்து தன் பொற்கரங்களால் விருதும் விருந்தும் கொடுத்து கௌரவப்படுத்தினார். இந்த மாபெரும் விழாவிற்கு ஒத்துழைப்பு கொடுத்த திரு.சிவகார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி".

 


 

Next Story

நான் யாருக்கு செய்றேன்னு சொல்லமாட்டேன், ஆனா செய்வேன் - சிவகார்த்திகேயன்  

Published on 08/01/2019 | Edited on 08/01/2019
siva

 

சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரித்த முதல் திரைப்படம் கனா. ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் நடிக்க, இவர்களுடன் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடித்த இந்த படம் கடும் போட்டிக்கு இடையே வெற்றி பெற்று திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் பணிபுரிந்த கலைஞர்களுக்கு ஷீல்டு வழங்கும் வெற்றி விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன் பேசியபோது...

 

"நடிகர் தான் என் அடையாளம், அது தான் நிரந்தரம். தயாரிப்பாளர் என்பதெல்லாம் அதில் இருந்து கிடைத்தது தான். நிறைய படங்களுடன் ரிலீஸ் ஆனாலும், அதில் ஹீரோ இல்லாத ஒரு படம் தான் இது. ஆனாலும் வெற்றியை எட்ட காரணம் அதை ரிலீஸ் செய்து கொடுத்த ஆருத்ரா ஃபிலிம்ஸ்க்கு நன்றி. வருத்தப்படாத வாலிபர் சங்கம் எனக்கு திருப்புமுனை தந்த படம், இது நான் தயாரித்த முதல் படம். என் சினிமா கேரியரின் இந்த இரண்டு முக்கியமான தருணங்களில் உடன் இருந்திருக்கிறார் சத்யராஜ் சார். திபு நினன் தாமஸ் இசை படத்துக்கு பெரிய பலம், வைக்கம் விஜயலக்‌ஷ்மி அவர்களின் குரலும் ஆசிர்வாதமும் நல்ல துவக்கத்தை தந்தது. ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு தேசிய விருது கிடைக்கும் என்று ட்விட்டரில் ஒரு கமெண்ட் பார்த்தேன். அது இந்த படத்தில் நடந்தாலும் மகிழ்ச்சி, வேறு படத்தில் நடந்தாலும் மகிழ்ச்சி. அந்த விருதுக்கு ஐஸ்வர்யா தகுதியானவர். 20 மேட்ச்க்கான காட்சிகளை படம் பிடித்து கொடுத்தாலும் அதை சிறப்பாக கட் செய்த ரூபனுக்கு நன்றி. தினேஷ் கிருஷ்ணன் மிக அழகாக ஒளிப்பதிவு செய்பவர். என்னை பாலசுப்ரமணியம் சாருக்கு பிறகு அழகாக காட்ட நிறைய முயற்சிகள் எடுப்பார். 

 

 

எனக்கு எந்த அழுத்தமும் கொடுக்காமல் எல்லா சுமையையும் தன் தோளில் தாங்கிய கலையரசுக்கு நன்றி. 'அற்புதமான நண்பர்கள் சேர்ந்தால் வெற்றிகள் குவியுமடா' என்ற பாடல் வரி எனக்கு மிகவும் பிடிக்கும். அதை நான் நம்புகிறேன், உணர்கிறேன். இந்த படம் எங்கள் பேனருக்கு லாபகரமான படம். இந்த லாபத்தில் ஒரு பகுதியை விவசாயிகளுக்கு ஒதுக்கி உதவி செய்ய இருக்கிறேன். நான் யாருக்கு என்ன செய்யப்போகிறேன் என்று நிச்சயமாக சொல்ல போவதில்லை. ஆனால் இந்த படம் எப்படி பல புதுமுக கலைஞர்களின் வாழ்க்கையை மாற்றியதோ அதேபோல் எங்கேயோ எதோ ஒரு மூலையில் இருக்கும் நலிந்த விவசாயின் வாழ்க்கையை கண்டிப்பாக நான் செய்யப்போகும் உதவி மாற்றும். இதை நான் சொல்லாமல் செய்யவேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் படத்தில் இவ்வளவு விஷயங்களை சொல்லிவிட்டு இதை இங்கு பதிவு செய்யாமல் போனால் தப்பு என்று தோன்றியது. நாம் மட்டும் இந்த வெற்றியை கொண்டாடினால் நன்றாக இருக்காது. இது விவசாயிகளுக்கும் போய் சேர வேண்டும்" என்றார்.