Advertisment

தம்பிக்காக குரல் கொடுத்த அண்ணன்!

Sivarajkumar speaking dubbing for puneeth rajkumar starring james film

Advertisment

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு சினிமா ரசிகர்கள் மற்றும் இந்தியத் திரைப்பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இயக்குநர் சேத்தன் குமார் இயக்கத்தில் ஜேம்ஸ் என்ற படத்தில் நடித்து வந்த நிலையில் தான் அவர் உயிரிழந்தார். இருப்பினும் இப்படத்தின் பணிகளை முடித்து வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் 'ஜேம்ஸ்' படத்தில் நடித்த மறைந்த புனித் ராஜ்குமாரின் கதாபாத்திரத்திற்கு அவரது சகோதரர் சிவராஜ்குமார் டப்பிங் பேசியுள்ளார். இது குறித்துஅவர் கூறுகையில், என் தம்பி படத்தில் அவருக்காகநான் டப்பிங் பேசியுள்ளது மிகவும் உணர்வுப் பூர்வமாக இருந்தது" எனத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் வெளியானஇப்படத்தின் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைபெற்றது குறிப்பிடத்தக்கது.

puneeth rajkumar James movie
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe