சொல்லாமலே, பூ, பிச்சைக்காரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் சசி. தற்போது சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தை இயக்கியிருக்கிறார். இந்த மாதம் வெளிவரவிருக்கும் இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து ஹிட்டாகிக்கொண்டிருக்கின்றன. சமீபத்தில் இப்படத்தின் முழு ஆல்பமும் ரிலீஸாகியுள்ளது.

Advertisment

sivappu manjal pachai

புதிய இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் பலரின் கவனத்தை பெற்றுள்ளது. இப்படத்தின் நாயகர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ், இந்த ஆல்பத்தில் தனது ஃபேவரிட் உசுரே பாடல் என்று ஃபீல் பண்ணி இந்தப் பாடலை தனது ட்விட்டர் அக்கவுண்டில் பகிர்ந்தார். இசையமைப்பாளர் சித்து குமாருக்கு தனது வாழ்த்தையும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜூன் இறுதியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஜூலை 5ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ஜூன் 14ஆம் தேதி இப்படத்தின் டீஸர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.