சொல்லாமலே, பூ, பிச்சைக்காரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் சசி. தற்போது சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தை இயக்கியிருக்கிறார். இந்த மாதம் வெளிவரவிருக்கும் இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து ஹிட்டாகிக்கொண்டிருக்கின்றன.

sivappu pachai manjal

Advertisment

Advertisment

'மயிலாஞ்சியே', 'ராக்காச்சி ரங்கம்மா', ஆகிய இரு பாடல்கள் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்து இளைஞர்களின் ரிங் டோனாகவும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாகவும் வலம் வந்துகொண்டிருக்கின்றன. புதிய இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் 'உசுரே' பாடல் சமீபத்தில் வெளிவந்திருக்கிறது. 'உசுரே விட்டு போயிட்ட... மனச வெட்டி வீசிட்ட...' என்று தொடங்கும் இந்தப் பாடல் காதலர்களுக்குள் ஊடல் வரும்பொழுது நிகழ்பவைகளை சொல்வதாக இருக்கிறது.

இப்படத்தின் நாயகர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ், இந்த ஆல்பத்தில் தனது ஃபேவரிட் இதுதான் என்று ஃபீல் பண்ணி இந்தப் பாடலை தனது ட்விட்டர் அக்கவுண்டில் பகிர்ந்தார். இசையமைப்பாளர் சித்து குமாருக்கு தனது வாழ்த்தையும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த படத்தின் முழு ஆல்பமும் வெளியிட்டிருக்கிறது படக்குழு. இப்படத்தின் இரு கதாநாயகன்கள் சித்தார்த், ஜிவி பிரகாஷ், இயக்குனர் சசி, இசையமைப்பாளர் சித்து குமார் உள்ளிட்டோர் சூர்யன் எஃப்.எம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முழு ஆல்பத்தையும் வெளியிட்டுள்ளனர்.