Advertisment

'பிச்சைக்காரன்' டீமில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ்...பர்ஸ்ட் லுக் வெளியீடு 

smp

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

'பிச்சைக்காரன்' படதிற்கு பிறகு இயக்குநர் சசி அடுத்ததாக சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் இணைந்து நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இப்படத்திற்கு ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ என்று தலைப்பு வைக்கப்பட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அக்கா தம்பி பாசத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படம் குறித்து இயக்குநர் சசி பேசியபோது... "அனைத்து தரப்பினரும் தங்கள் நிஜவாழ்க்கையை உணரும் வகையில் இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. அக்காவாக மலையாள திரையுலகின் முன்னணி நடிகை லிஜோமோள் நடிக்கிறார். இவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது. இவருக்கு ஜோடியாக சித்தார்த் நடிக்கிறார். தம்பியாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கிறார். முதல்முறையாக போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக சித்தார்த் நடிக்கிறார். இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பாக துடிப்பான வேடத்தில் பைக் சாம்பியனாக ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கிறார். ஒரு முக்கிய வேடத்தில் காஷ்மீரா அறிமுகமாக இன்னொரு முக்கிய வேடத்தில் மதுசூதனன் நடிக்கிறார். அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி.பிள்ளை இந்த படத்தை தயாரிக்கிறார். பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்ய, இசையமைப்பாளராக சித்து குமார் அறிமுகம் ஆகிறார்" என்றார்.

Advertisment

GV prakash sasi sidharth sivapu manjal pachai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe