Hiphop adhi

‘ஆம்பள’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப்ஹாப் ஆதி, ‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலம் நடிகராகவும் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். அப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, ‘நட்பே துணை’, ‘நான் சிரித்தால்’ உள்ளிட்ட படங்களில் நடித்த ஆதி, தற்போது ‘சிவகுமாரின் சபதம்’, ‘அன்பறிவு’ ஆகிய படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.

Advertisment

இதில், ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்துள்ள ‘சிவகுமாரின் சபதம்’ திரைப்படம், வரும் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதற்கான முன்னோட்டமாக படத்தின் ட்ரைலரை படக்குழு நேற்று (19.09.2021) வெளியிட்டது. தமிழ் சினிமா வரலாற்றில் யாரும் செய்யாத வகையில், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என மொத்தம் 29 பேர் இணைந்து இந்த ட்ரைலரை வெளியிட்டனர். இந்த நிலையில், ட்ரைலர் வெளியான 24 மணி நேரத்திற்குள் யூடியூப் தளத்தில் 12 மில்லியன் பார்வைகளைக் கடந்து, ட்ரெண்டிங்கில் 6வது இடத்தைப் பிடித்துள்ளது. ஹிப்ஹாப் ஆதியின் இந்த வித்தியாசமான முயற்சிக்கு கிடைத்த வெற்றி, படக்குழுவினருக்கு கூடுதல் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

Advertisment