Skip to main content

சிபிராஜ் படத்தை தொடங்கிவைத்த நடிகர் சிவகுமார்

Published on 01/11/2019 | Edited on 01/11/2019

சிபிராஜ்-நந்திதா - பூஜா குமார் நடிக்கும் 'கபடதாரி' படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் சிபிராஜ் மற்றும் தொழில்நுட்ப குழுவினருடன் படத்தின் நட்சத்திர நடிகர்கள் கலந்து கொண்டனர். பூஜை முடிந்ததும் படப்பிடிப்பும் ஆரம்பமானது. 

 

gesa

 

 

இதில் மூத்த நடிகர் சிவகுமார் முதல் காட்சிக்கு கிளாப் அடித்து படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார். மேலும் விழாவில் திரையுலகினர் பலர் ஆகியோர் கலந்து கொண்டனர். சத்யா, சைத்தான் பட இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் இப்படத்தை கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் மற்றும் விநியோகஸ்தர்கள் லலிதா தனஞ்சயன் தயாரிக்கிறார். மேலும் நாயகியாக நந்திதா நடிக்க, விஸ்வரூபம் புகழ் பூஜா குமார், நாசர், ஜெயபிரகாஷ், ஜே.சதீஷ்குமார் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இன்று முதல் தொடங்கிய படப்பிடிப்பு தொடர்ந்து முழு வீச்சில் நடைபெறவுள்ளது. மேலும் படத்தை 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''இந்த பாட்டுக்கு உதாரணமாக வாழ்பவர்கள் சக்தி மசாலா சாந்தியும், துரைசாமியும்''-நடிகர் சிவக்குமார் பேச்சு

Published on 04/02/2024 | Edited on 04/02/2024
"Shakti Masala Shanti and Duraisamy are living examples of this song" - actor Sivakumar speech

ஈரோட்டில் இயங்கி வரும் சக்தி மசாலா நிறுவனங்களின் ஒரு அங்கமான சக்திதேவி அறக்கட்டளையின் 24 வது ஐம்பெரும் விழா  ஈரோடு சக்தி துரைசாமி திருமண மண்டபத்தில் நடந்தது.

திருப்பூர் பாப்பீஸ் குழுமத்தை சேர்ந்த செல்வீஸ்வரிசக்திவேல் குத்துவிளக்கேற்றினார். சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் முனைவர் பி.சி. துரைசாமி வரவேற்றார். வாழ்நாள் சாதனையாளர் விருது, மரங்களின் காவலர் விருது மற்றும் பதக்கம், 2022–23 ம் கல்வி ஆண்டில் முதல், இரண்டாம் பிடித்த மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி, திரைப்பட நடிகர் சிவக்குமார் பேசியதாவது, 'கடந்த 2500 ஆண்டுகளுக்கு முன் நாக்கீரன் ஒரு பாடலில் சொல்லி உள்ளார். அளவு கடந்த சொத்து சேர்ந்து விட்டால், அது குடும்பத்திற்கு போக மீதி சமுதாயத்துக்கு பங்கு போட்டுக்கொள், இல்லை என்றால் அந்த சொத்தே உன்னை அழித்து விடும். இந்த பாட்டுக்கு உதாரணமாக சக்தி மசாலா சாந்தியும், துரைசாமியும் வாழ்ந்து வருகிறார்கள்'' என்றார்.

வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற திருப்பூர் பாப்பீஸ் குழுமங்களின் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் ஆ. சக்திவேல், அரிமா கூட்டு மாவட்ட முன்னாள் தலைவர் முத்துசாமி, திண்டல் பாரதி வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் டாக்டர் எல்.எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.

விழாவில், 338 மாணவ, மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை, பொருளாதாரத்தில் பின்தங்கிய 748 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை, ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளைக்கு ஆம்புலன்ஸ் இமயம் காப்பகம், கொங்குநாடுஅறக்கட்டளை, ஈரோடு மிட்டவுன் சேரிடபுள் மற்றும் சர்வீஸ் டிரஸ்ட், சென்னை கொங்கு அறக்கட்டளை, ரோட்டரி திருப்பூர் பிரைம் டிரஸ்ட் என சமுதாய பணிகளுக்காக ரூ.1 கோடியே 37 லட்சத்து 22 ஆயிரத்து 125 ரூபாய் நலத்திட்டம் வழங்கப்பட்டது.

விழாவில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை சாந்திதுரைசாமி, டி.செந்தில்குமார், தீபா செந்தில்குமார், இளங்கோ, வேணுகோபால் மற்றும் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

Next Story

விஜயகாந்த்தின் நினைவிடத்தில் கார்த்தி கண்கலங்கியபடி அஞ்சலி!

Published on 04/01/2024 | Edited on 04/01/2024
karthi pays tribute to vijayakanth in his memorial

நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். 

மேலும் அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். விஜயகாந்த்தின் உடலுக்கு ரஜினி, கமல், விஜய், இளையராஜா என பல்வேறு திரைப்பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். சூர்யா, பாரதிராஜா உள்ளிட்ட சிலர் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வருத்தம் தெரிவித்தனர். பின்பு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் சென்னை கோயம்பேடு அருகே உள்ள தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.  

இந்த நிலையில் விஜயகாந்த்தின் நினைவிடத்தில் சிவகுமார், கார்த்தி தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து மலர் தூவி மற்றும் மலை வளையம் வைத்து மரியாதை செய்தனர். அப்போது கார்த்தி கண்கலங்கியபடி அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்த் மறைந்த தினத்தன்று கார்த்தி உருக்கமுடன் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.