Advertisment

சூர்யாவிற்கு முன்னாடி தமிழ்நாட்டில் சிக்ஸ்பேக் வச்சவன் யாரு இருக்கா? - சிவகுமார்

Sivakumar question Who had a six-pack in Tamil Nadu before Suriya

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ரெட்ரோ திரைப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனையொட்டி நேற்று அப்பட்டத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய சூர்யாவின் தந்தையும் நடிகருமான சிவகுமார், “சூர்யாவிற்கு 17 வயசு, 12 ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த ஜோதிடர் ஒருவர், பசங்க ரெண்டு பேருடைய ஜாதகத்தையும் பார்த்துவிட்டு, இந்த பையன் கலைதுறையில் பெரிய ஆளா வருவான் என்று சொன்னார். நான் உடனே, சூர்யாவா? இல்ல கார்த்தியா? என்று கேட்டேன். அவர் பெரிய தம்பு சூர்யாவை தான் சொன்னேன் என்றார். காலையில் இருந்து மாலை வரைக்கும் நாளு வார்த்தை தான் பேசுவன், இவன் எப்படி கலைத் துறையில் வருவான்னு சொல்றீங்க. ஒரு வேல டைரக்டராவோ, இல்ல கேமராமேனாவோ வருவனோன்னு கேட்டேன். இல்ல சார் முகத்தை வைத்து பண்ற தொழிலுன்னு சொன்னாரு. நான் உடனே நடிகரா வரபோறானான்னு கேட்டேன். ஆமான்னு சொன்னார்.

Advertisment

யோய் நீ என்ன லூசான்னு கேட்டேன். அதற்கு அந்த ஜோதிடர், சார் உண்மையா தான் சொல்றேன், நீஙக் வேணுன்னா பாருங்க உங்களவிட நல்ல நடிகரென்று பேர் வாங்குவார், நிறைய விருது வாங்குவார், அதிகமா சம்பாதிப்பார் என்று சொன்னார். நான் இந்தாளுக்கு மர கழண்டுபோய்சிபோலன்னு நெனச்சி சரிபோங்கன்னு விட்டுடன். இதெல்லாம் பார்த்து சிரிச்ச சூர்யா, நாடிகன் மகன் நடிகனாகத்தான் ஆகனுமா? நானெல்லாம் நடிகனாகவே மாட்டேன்னு சொல்லிவிட்டு காலேஜ் படிச்சு முடிச்சிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.

Advertisment

அந்த நேரத்தில் தமிழ்சினிமா பிரபலங்கள் எல்லாம் மலேசியாவில் உள்ள ஒரு கலை நிகழ்ச்சிக்கு போயிருந்தோம். அப்போது இயக்குநர் வசந்த் ஒரு நாளைக்கு முன்னாடியே சென்னை வரவேண்டியதா போயிடுச்சி. விமானத்துல சென்னை வந்துட்டு இருக்காரு. அவரோட எங்க பேமிலி டாக்டரும் விமானத்துல கூட வந்துட்டு இருக்காரு. நான் உடனே சூர்யாவுக்கு போன் பண்ணி நம்ம ஃபேமிலி டாக்டர் விமானதுல வந்துட்டு இருக்காரு நீ போய் அவர் அழைச்சிட்டு போய் அவங்க வீட்டல விட்டுட்டு வந்துருன்னு சொன்னேன். அப்போ விமான நிலையத்துல சூர்யாவை பார்த்துட்டு இயக்குநர் வசந்த் இந்த பையன் யாருங்கன்னு கேட்டு இருக்கார். அப்போ நடிகர் சிவகுமார் பையன்னு சொன்னதும், சரின்னு போய்டாராம்.

அப்புறம் ரெண்டு நாள் கழிச்சு, டைரக்டர் வசந்த் எனக்கு கால் பண்ணி, ‘சார் உங்க பையனுக்கு சினிமால நடிக்கிற ஆசை இருக்கா?’ன்னு கேட்டார். ‘சத்தியமா அவனுக்கு அந்த ஆசை கிடையாது. ஜவுளி நிறுவனத்துல வேலை பார்த்துட்டு இருக்கான்’னு சொன்னேன். நான் வேணுன்னா பேசிபாக்கட்டுமான்னு கேட்டார். அவன் பேசுனாலும் மாறமாட்டான், இருந்தாலும் நீங்க பேசிபாருங்கன்னு சொன்னேன். அவரு பேசுனாரு, ஆனா, சூர்யா நடிப்பதற்கு பயமா இருக்குன்னு சொல்லிட்டார். அப்புறம் பேசி பார்த்தபிறகு சரி ஒரு முயற்சி பண்ணி பாப்போம் முடியலன்னா திரும்பவும் ஜவுளி நிறுவனத்திற்கே வேலைக்கு போய்டுவேன்னு சொன்னார். அப்புறம் லுக் டெஸ்ட் எல்லாம் எடுத்தாங்க, நான் அந்த படத்தோட தயாரிப்பாளர் மணிரத்னத்திற்கு போன் செய்து, சார் அவன் சிவகுமார் பையன்னு நீங்க எதையும் எதிர்பாக்காதீங்க அவனுக்கு சுத்தமா நடிப்பு வராது. அப்புறம் ஏமாந்துபோய் சரிவராதுன்னு திருப்பி அனுப்புனீங்கன்னா அவன் லைஃவே வீணாப்போய்விடும். இப்பவே திருப்பி அனுப்பிவிடுங்கன்னு சொன்னே. அதற்கு அவர், சார் 200 சதவீதம் நான் நம்பிக்கை வைத்திருக்கிறோம். நாங்கள் பார்த்துகொள்கிறோம் என்றார். அப்புறம் வசந்த், நேருக்கு நேர் படத்தின் முதல் பாடலில் சூர்யாவின் முகத்தை பார்த்துவிட்டு இந்த கண்கள் தமிழ்நாட்டு பெண்களின் தூக்கத்தைக் கலைக்கக் கூடிய கண்கள் என்று சொன்னார். அப்படி சினிமாவை தன்னுடைய கனவிலும் நினைத்து கூட பார்க்காத பையனை நடிகனாக்கிய இயக்குநர் வசந்திற்கும், தயாரிப்பாளர் மனிரத்னத்திற்கு பாதம் தொட்டு நன்றியை தெரிவித்துகொள்கிறேன். அதன் பிறகு ரெண்டு படம் சரியா போகவில்லை. உடனே பாலா வந்து, 'டேய் தமிழ்நாடில் மிக சிறந்த நடிகனா வருவடா’ன்னு படம் எடுத்து நிருபித்துகாட்டினார்.

பின்னர் முழு நடிகனாக மாற வேண்டும் என்பதற்காக உடலை வருத்தி 4 மணி நேரம் நடனமாடுவார். அதன்பிறகு சங்கர் மாஸ்டர், ஹரிஹரன் மாஸ்டரெல்லாம் அதிகாலை 4 மணிக்கு கூட்டிட்டு போய் பீச்சில சண்டைப் பயிற்சி மேற்கொள்வார். என்னுடைய சிற்றரிவுக்கு எட்டியவரைக்கும் சொல்றேன், உடலை வருத்தி புலிஞ்சி சிக்ஸ் பேக் வச்சவங்க யாரு இருக்காங்க?, சூர்யாவிற்கு முன்னாடி தமிழ்நாடில் சிக்ஸ் பேக் வச்சவன் யாரு இருக்கா? ஆனால், இந்த மாதிரியெல்லாம் இப்படி உடலை வருத்திக்கொள்ள கூடாதுன்னு எச்சரிக்கையும் சூர்யா கொடுத்தார். இப்படி பல கட்டங்களை கடந்து சினிமாவில் 28 வருடங்களை நிறைவு செய்திருக்கிறார்” என்றார்.

actor sivakumar actor surya karthik subbaraj Retro
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe