sivakumar

கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். அதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.மேலும் எக்மோ மற்றும் உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் எஸ்.பி.பி.யின் உயிர்பிரிந்தது. இன்று மதியம் 01.04 மணிக்கு அப்பா உயிரிழந்ததாகஎஸ்.பி.பி.யின் மகன் சரண் தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் நடிகர் சிவக்குமார் இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அரை நூற்றாண்டுக்கும் மேலாக எத்தனை ஆயிரம் பாடல்களை எத்தனை மொழிகளில் பாடிய உன்னதக் கலைஞன். மூச்சுக்காற்று முழுவதையும் பாடல் ஓசையாக மாற்றியவன். இமயத்தின் உச்சம் தொட்டும் பணிவின் வடிவமாக,பண்பின் சிகரமாக இறுதி வரையிலும் வெளிப்பட்டவன். இதுவரை மக்களுக்குப் பாடியது போதும் இனி என்னிடம் பாட வா என்று இறைவன் அழைத்துக் கொண்டான். போய் வா தம்பி" என்று தெரிவித்துள்ளார்.