
சிவகார்த்திகேயன் தற்போது பராசக்தி மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதில் மதராஸி படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. பராசக்தி படம் படப்பிடிப்பில் இருக்கிறது.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்தினருடன் கீழடி அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார். சிவங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அருங்காட்சியகத்தில் 2,600 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன. நாள்தோறும் ஏராளமான மக்கள், திரைப் பிரபலங்கள், வெளிநாட்டவர்கள், ஆராய்ச்சியாளர்கள் எனப் பலரும் அருங்காட்சியகத்துக்கு வருகை தந்து கண்டுகளிக்கின்றனர்.
அந்த வகையில் தற்போது குடும்பத்தினருடன் வந்த சிவகார்த்திகேயன், அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் குறித்து ஆர்வமுடன் கேட்டறிந்து மகிழ்ந்தார். அவரை பார்த்ததும் அங்கிருந்த மக்கள் அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.